AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

India vs Pakistan, Asian Games Final Updates : பயம்காட்டிய நவாஸ்.. போராடிய இந்திய பவுலர்கள்.. தங்கத்தை தூக்கிய ஷ்ரேயாஸ் படை!

IND vs PAK Asian Games Final Updates : 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 192 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது.

C Murugadoss
C Murugadoss | Updated On: 03 Oct 2026 14:28 PM IST
Share
India vs Pakistan, Asian Games Final Updates : பயம்காட்டிய நவாஸ்.. போராடிய இந்திய பவுலர்கள்.. தங்கத்தை தூக்கிய ஷ்ரேயாஸ் படை!
Ind Live Win Gold

ஜப்பானின் ஐச்சி நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதால், அவற்றுக்கிடையேயான தங்கப் பதக்கப் போட்டியின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games) தங்கப் பதக்கப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இதற்கு முன்பு தங்கப் பதக்கப் போட்டிக்கு முன்னேறியதில்லை. இந்த முறை, அவர்கள் முதல் முறையாக தங்கப் பதக்கப் போட்டியில் விளையாட உள்ளனர்.

இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்..

இந்திய அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், வைபவ் சூர்யவன்ஷி, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்குர், விப்ராஜ் நிகம்.

பாகிஸ்தான்: சாஹிப்சாதா ஃபர்ஹான் (கேப்டன்), அப்துல் சமத், ஹசன் நவாஸ், சைம் அயூப், அஃப்ரத் மின்ஹாஸ், அகமது டேனியல், முகமது வாசிம் ஜூனியர், அப்ரார் அகமது, சுஃப்யான் மொக்கீம், உஸ்மான் கான், அலி ரசா, அகிஃப் ஜாவேத், ஹைதர் அலி, மஸ் சதகாத், சாத் மசாத்.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Oct 2026 01:35 PM (IST)

    India vs Pakistan Live: போராடிய இந்திய பவுலர்கள்.. தங்கத்தை தூக்கிய ஷ்ரேயாஸ் படை!

    2026 ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கத்தை தூக்கியது.

  • 03 Oct 2026 01:13 PM (IST)

    India vs Pakistan Live: 17 ஓவர்களில் 150 ரன்களை தொட்ட பாகிஸ்தான்.. நவாஸ் விக்கெட்டை எடுக்க திணறும் இந்திய பவுலர்கள்!

    212 ரன்களை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தானில் நவாஸ் 70 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இதன் காரணமாக, பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது.

  • 03 Oct 2026 01:02 PM (IST)

    India vs Pakistan Live: அடித்து ஆடும் பாகிஸ்தான் வீரர்கள்.. தடுக்குமா இந்திய அணி?

    14 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி, இந்திய அணி கொடுத்த  212 ரன்களை நோக்கி பாகிஸ்தான் அணி நெருங்கி வருகிறது.

  • 03 Oct 2026 12:24 PM (IST)

    India vs Pakistan Live: விக்கெட் எடுக்க தொடங்கிய இந்திய பவுலர்கள்.. 3 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்!

    212 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 6.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • 03 Oct 2026 11:45 AM (IST)

    India vs Pakistan Live: அபிஷேக், திலக் அதிரடி அரைசதம்.. 211 ரன்கள் குவித்த இந்திய அணி!

    2026 ஆசிய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா தங்களது அரைசதங்களை பதிவிட்டிருந்தனர்.

  • 03 Oct 2026 11:12 AM (IST)

    IND vs PAK Final: 131 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த இந்திய அணி..

    இந்திய அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.

  • 03 Oct 2026 10:49 AM (IST)

    IND vs PAK Final: 61 ரன்களில் அபிஷேக் வெளியேற்றம்.. 9 ஓவர்களில் 100 ரன்களை கடந்த இந்தியா!

    அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 61 ரன்களில் ஆட்டமிழந்த நிலையி, இந்திய அணி 9 ஓவர்களில் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

  • 03 Oct 2026 10:41 AM (IST)

    IND vs PAK Final: அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா.. 100 ரன்களை நோக்கி இந்தியா!

    பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அரைசதம் கடந்தார். இதன்மூலம், இந்திய அணி 7 ஓவர்களில் 80 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

  • 03 Oct 2026 10:25 AM (IST)

    IND vs PAK Final: 2 விக்கெட்களை இழந்த இந்திய அணி.. சஞ்சு சாம்சன் மீண்டும் ஏமாற்றம்!

    பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

  • 03 Oct 2026 10:24 AM (IST)

    IND vs PAK Final: டாஸின் போதும் கை குலுக்காத இரு அணி கேப்டன்கள்:

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்களும் எதிர்பார்த்த ஒரு விஷயம் கைகுலுக்குவதுதான். அதேபோல், இரு அணி வீரர்களுக்கும் இடையே கைகுலுக்கல் இல்லாததுதான். அந்தவகையில், ஆசிய விளையாட்டு போட்டி இறுதிப்போட்டி டாஸின் போது கூட, இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் பாகிஸ்தான் கேப்டன் சாஹிப்சாதா ஃபர்ஹானும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கவில்லை. அதன்படி, போட்டியின் போது இரு அணிகளுக்கும் இடையே கைகுலுக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.

  • 03 Oct 2026 10:14 AM (IST)

    IND vs PAK Final: முதல் விக்கெட்டை இழந்த இந்தியா.. 15 ரன்களில் சூர்யவன்ஷி அவுட்!

    பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  • 03 Oct 2026 10:10 AM (IST)

    IND vs PAK Final: அதிரடியை தொடங்கிய வைபவ்.. தொடங்கிய ரன் மழை..!

    2026 ஆசிய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் இந்திய தொடக்க வீரர் வைபவ சூர்யவன்ஷி அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

  • 03 Oct 2026 09:45 AM (IST)

    இறுதிப்போட்டியில் வைபவ்..?

    15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அடித்தார். இஷான் கிஷன் 173.91 ஸ்டிரைக் ரேட்டில் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார்.

  • 03 Oct 2026 09:32 AM (IST)

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு

  • 03 Oct 2026 09:30 AM (IST)

    13 முறை தோற்ற பாகிஸ்தான்

    இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 13 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது.

  • 03 Oct 2026 09:14 AM (IST)

    கை குலுக்கல் இல்லை

     

    இந்தப் போட்டிக்கு முன்னால் இருந்த மிகப்பெரிய கேள்விக்குறி, இரு அணிகளுகும் போட்டிக்கு இடையே கை குலுக்கி கொள்வார்கள். கடந்த 383 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

  • 03 Oct 2026 09:00 AM (IST)

    யாருக்கு சாதகம்?

    அரையிறுதிப் போட்டியில் இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசத்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இத்தொடரில் இதுவரை இரு அணிகளும் தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

  • 03 Oct 2026 08:45 AM (IST)

    இந்திய அணி ஆதிக்கம்

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கடந்த ஆறு டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2022 ஆசியக் கோப்பையில் இந்தியாவைத் தோற்கடித்தது.

  • 03 Oct 2026 08:30 AM (IST)

    போட்டி மழையால் கைவிடப்பட்டால் யாருக்குத் தங்கப் பதக்கம்?

    இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் மீண்டும் போட்டி நடைபெறும் ரிசர்வ் டே எதுவும் ஒதுக்கப்படவில்லை.தற்போது வெளியான தகவல்களின்படி, மழையின் காரணமாக இறுதிப் போட்டி கைவிடப்பட்டால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் கூட்டாகத் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

  • 03 Oct 2026 08:15 AM (IST)

    இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது?

    2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி அக்டோபர் 3, 2026 இன்று  இந்திய நேரப்படி காலை 10 மணியளவில் போட்டி தொடங்கவுள்ளது

Published On - Oct 03,2026 8:00 AM

Follow Us