மதுபோதையில் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி – வட மாநில இளைஞரை அடித்தே கொன்ற கிராம மக்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் வட மாநில இளைஞர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படும் நிலையில் இளைஞரை ஊர் மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தண்ணீர் கேட்பது போல நடித்து அந்த இளைஞர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூர், மே 30 : மது போதையில் பெண்களிடம் தகராறு செய்த அசாம் மாநில இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த இளைஞர் மரணமடைந்தாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தை அடுத்த ராமராஜகண்டிகை என்ற ஊரில் உள்ள ஒரு வீட்டில் 2 பெண்கள் தனியாக இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த வட மாநில இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அந்த பெண்களுக்கு இளைஞர் மது போதையில் இருப்பது தெரிய ர தண்ணீர் மறுத்திருக்கின்றணர். இதனால் அந்த இளைஞர் பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியிருக்கிறது.
வட மாநில இளைஞரை அடித்தே கொன்ற கிராம மக்கள்
இதனையடுத்து அந்த பெண்கள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த உறவினர்களும் அந்த ஊர் மக்களும் இளைஞனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : “உன் அப்பன் சாகுறத பாரு”.. மகள் கண் முன்னே துடிதுடிக்க கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்!!




விசாரணையில் அந்த இளைஞர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அ்த இளைஞரின் பெயர் பிரசென்ஜித் தாஸ் என்பதும் அவருடன் 5 இளைஞர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து வேலை தேடி திருவள்ளூர் வந்துள்ளனர். திருவள்ளூரில் அறை ஒன்றை வாடக்கைகக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் பிரசென்ஜித் தாஸ் என்பதும் தனியாக இருந்த பெண்களிடம் தண்ணீர் கேட்பது போல தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்கள் வீட்டின் கதவை மூடியிருக்கின்றனர்.
இதையும் படிக்க : கன்னியாகுமரியில் பரபரப்பு.. 3 காவலர்களை கூண்டோடு சஸ்பெண்ட் செய்த எஸ்.பி. ஸ்டாலின்!
அப்போது பிரசென்ஜித் தாஸ் கத்திால் ஜன்னலை உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்கள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் ஊர் மக்களுடன் வந்து பிரசென்ஜித் தாஸை தாக்கியுள்ளனர். இதில் பிரசென்ஜித் தாஸ் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நட்தித வருவதாக கூறப்படுகிறது.