AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இலவச கறி தர மறுப்பு – போதையில் 100க்கும் மேற்பட்ட வாத்துக்களை வெட்டி கொன்ற இளைஞர்கள்

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அடுத்த தருவையில் இலவசமாக கறி தராத காரணத்தால் 100க்கும் மேற்பட்ட வாத்துகளை 2 இளைஞர்கள் மது போதையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலவச கறி தர மறுப்பு –  போதையில் 100க்கும் மேற்பட்ட வாத்துக்களை வெட்டி கொன்ற இளைஞர்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 May 2026 20:01 PM IST

சென்னை, மே 26 :  திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அடுத்த தருவையில் 100க்கும் மேற்பட்ட வாத்துகளை 2 இளைஞர்கள் போதையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே தருவை என்ற பகுதியில் ராமசாமி என்பவர் சொந்தமாக வாத்து பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அவரது பண்ணையில் நூற்றுக்கணக்கான வாத்துகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன.

போதையில் 100க்கும் மேற்பட்ட வாத்துக்களை வெட்டிக்கொன்ற இளைஞர்கள்

இந்த நிலையில் மே 25, 2026 அன்று ராமசாமி தனது பண்ணையில் வாத்துகளை வைத்து பராமரித்து வந்திருக்கிறார். அப்போது அவரது பண்ணையில் வாத்துகளை பராமரித்து வந்த மகாராஜன் என்பவரும் அவரது நண்பர்களும் குடி போதையில் இலவசமாக வாத்துக்கறி கேட்டுள்ளனர். ஆனால் ராமசாமி அவர்களுக்கு தர மறுக்கவே அவருடன் மகாராஜனும் அவரது நண்பர்களும வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் வாக்குவாதம் தராறாக மாறி கைகலப்பு வரை சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டல்.. தவெக நிர்வாகி பதவி பறிப்பு.. கட்சி தலைமை அதிரடி!

இதனால் ஆத்திரமடைந்த மகாராஜனும் அவரது நண்பர்களும் மே 26, 2026 அன்று அதிகாலை 1 மணியளவில் போதையில் அங்கு வந்து மீண்டும் ராமசாமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ராமசாமியை தாக்கிவிட்டு பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வாத்துகளை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியே ரத்தவெள்ளமாக காட்சியளித்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலவச கறி தரமறுத்ததால் ஆத்திரம்

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மே 26, 2026 அதிகாலை முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான மகாராஜன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க : தமிழகத்தில் மூதாட்டிக்கும் பாதுகாப்பில்லாத நிலையா? 80 வயது பாட்டியிடம் வக்கிர புத்தியை காட்டிய காமுகன்.. செல்போனை வைத்து தூக்கிய போலீஸ்!

இலவசமாக வாத்துக்கறி கேட்டு தர மறுத்ததால்  வாத்துகளை கொன்ற இளைஞர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதை பழக்கமே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாத்துகளை வைத்து தொழில் செய்து வந்த ராமசாமி தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்.

Follow Us