AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழைய பகைக்கு பழி தீர்ப்பு.. மதுரையில் பதறவைத்த சிறுவன் கொலை.. 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்!

Madurai Boy Murder Case : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேர் கொண்ட கும்பலை விளக்கு தூண் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பழைய பகைக்கு பழி தீர்ப்பு.. மதுரையில் பதறவைத்த சிறுவன் கொலை.. 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்!
மதுரை சிறுவன் கொலையில் 5 பேர் கைது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 May 2026 06:59 AM IST

மதுரை மாவட்டம், வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் குபேந்திரன் ( 17 வயது). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் சிறுவன் குபேந்திரனை பயங்கரமான ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இதில், சிறுவனுக்கு தலை, முகம், முதுகு உள்ளிட்ட 23 இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இந்த சம்பவத்தை அறிந்த விளக்கு தூண் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தேடிவந்தது. இதில், திடீர் நகரை சேர்ந்த முத்துமணி ( 28 வயது), அவரது சகோதரர் தம்பி ராஜ் ( 26 வயது), மேலவாசல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் ( 28 வயது), வடக்கு மாசி வீதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் ( 18 வயது), திடீர் நகரை சேர்ந்த முத்து குமார் ( 19 வயது) ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\

முத்து மணியின் காதில் பாட்டிலால் குத்திய சிறுவன்

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை சம்பவத்திற்கான காரணம் தெரியவந்தது. அதில், மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரைத் திருவிழா நடைபெற்றது. அப்போது, சுவாமி ஊர்வலம் நடைபெற்ற போது, சிறுவன் குபேந்திரனுக்கும், முத்து மணி என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஆத்திரம் அடைந்த குபேந்திரன் பாட்டிலால் முத்துமணியின் காதில் குத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து குபேந்திரன் கைது செய்தனர்.

மேலும் படிக்க: விளாத்திக்குளம் பிளஸ் டூ மாணவி பாலியல் கொலை வழக்கு கடந்து வந்த பாதை!

சிறுவனை தீர்த்து கட்ட திட்டம்

பின்னர், அந்த சிறுவனை விடுவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், தனது காதில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்குள் குபேந்திரன் தீர்த்து கட்ட வேண்டும் என்று முத்துமணி மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அதன்படி, சம்பவத்தன்று இரவு மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் சிறுவன் குபேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தது முத்து மணி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தெரிய வந்துள்ளது.

பயங்கர ஆயுதங்களால் சிறுவனுக்கு சரமாரி வெட்டு

இதைத் தொடர்ந்து, சிறுவனை தீர்த்து கட்டுவதற்காக பயங்கர ஆயுதங்களுடன் அங்கு சென்று குபேந்திரன் பழிக்கு பழியாக வெட்டி கொலை செய்வது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. உலக புகழ் பெற்ற மதுர மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு.. குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Follow Us