விளாத்திக்குளம் பிளஸ் டூ மாணவி பாலியல் கொலை வழக்கு கடந்து வந்த பாதை!
Vilathikulam Student Murder Case Details: விளாத்திக்குளத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் கொலை சம்பவம் முதல் குற்றவாளிக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தது வரை இந்த வழக்கு கடந்து வந்த பாதை என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ் டூ மாணவி. இவர், கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு எழுதி வந்த நிலையில் மார்ச் 10-ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அங்கு, ரவுடி தர்ம முனிஸ்வரன் அந்த மாணவியே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், சுமார் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் ரவுடி தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் படிக்க: தமிழகத்தை ஆள விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? பொம்மை முதல்வர் என கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!
பிளஸ் டூ மாணவி பாலியல் கொலை முதல் நீதிமன்றம் தீர்ப்பு வரை
இந்த நிலையில், பிளஸ் டூ மாணவி பாலியல் கொலை வழக்கு முதல் கைதானவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது வரை இந்த வழக்கு கடந்து வந்த பாதை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
- மார்ச் 10- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) இயற்கை உபாதை களிப்பதற்காக சென்ற பிளஸ் டூ மாணவி.
- மார்ச் 11- ஆம் தேதி ( புதன்கிழமை) காட்டுப்பகுதியில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்பு
- மார்ச் 12- ஆம் தேதி ( வியாழக்கிழமை) மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை பெற மறுத்த இன்ஸ்பெக்டர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- முன்னதாக அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம், சாலை மரியலில் ஈடுபட்டனர்.
- மார்ச் 19- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சி. சி. டி. வி. கேமரா காட்சிகள் அடிப்படையில் சாயல்குடியை சேர்ந்த ரெளடி தர்ம முனிஸ்வரன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- மார்ச் 20- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) சுமார் 10 நாட்களுக்கு பிறகு மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் வழங்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
- மே 5- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது.
- மே 21- ஆம் தேதி ( வியாழக்கிழமை) பிளஸ் டூ மாணவி பாலியல் கொலை வழக்கு விசாரணை நிறைவடைந்தது.
- மே 25- ஆம் தேதி ( திங்கள்கிழமை) தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பளிப்பு.
மேலும் படிக்க: “கத்தியதால் கழுத்தை நெறித்தேன்.. உடலை முள்புதரில் வீசினேன்”.. கோவை சிறுமி கொலையில் குற்றவாளி பகீர் வாக்குமூலம்!

