AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தை ஆள விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? பொம்மை முதல்வர் என கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran Criticized CM Vijay: தமிழகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்காமல் மற்றொரு பொம்மை முதல்வராக விஜய் இருப்பதாகவும், அவர் தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தை ஆள விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? பொம்மை முதல்வர் என கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!
விஜய் மீது நயினார் கடும் விமர்சனம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 May 2026 11:30 AM IST

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னரும் சட்டம்- ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் எங்கு கொலை நிகழ்ந்துள்ளது. எந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்ற அச்சத்திலேயே பொழுது விடியும் நிலை உள்ளது. தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் நிர்வாக அடிப்படையை கற்றுக் கொள்வதற்கு இன்னும் எத்தனை உயிர்களை காவு கொடுக்க வேண்டும் என தெரியவில்லை.

குற்றவாளிகளை அமைச்சராக்குவதில் விஜய்க்கு கவனம்

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை பற்றி கடுமையாக விமர்சித்த விஜய் தான் பொறுப்பேற்றவுடன் அதை சரி செய்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு ஊரில் உள்ள குற்றவாளிகளை தேடி பிடித்து அமைச்சர் ஆக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும். தமிழகத்தில் ஆட்சி மட்டும் தான் மாறி உள்ளதே தவிர, அவங்கள் அப்படியேதான் தொடர்கின்றன.

மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. டி.கே சிவகுமாரின் ஆணவப்போக்கு – முதல்வர் விஜய் வாய் திறப்பாரா? கே.என். நேரு கேள்வி..

கோவை சம்பவம் போன்று விழுப்புரத்தில் பாலியல் தொந்தரவு

தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமியின் பாலில் வன்கொடுமை மற்றும் படுகொலையின் ரணம் மாறுவதற்கு முன்னரே விழுப்புரம் மாவட்டத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தனக்கு வாக்கு செலுத்துமாறு பெற்றோர்களை வலியுறுத்துங்கள் என எந்த குழந்தைகளை விஜய் தூண்டி விட்டாரோ, நான் தான் உங்கள் தாய் மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்த குழந்தைகளுக்கு விஜய் தூண்டில் போட்டாரோ அந்த குழந்தைகள் தான் தினமும் ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது.

மற்றொரு பொம்மை முதல்வர் விஜய்

இதனை ஜோசப் விஜய் வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம் ஆகும். இவ்வாறு தனது ஆட்சியில் நடக்கும் எந்த பிரச்சனைகளையும் கண்டுகொள்ளாமல் மற்றொரு பொம்மை முதல்வர் விஜய் அரியணையில் அமர்ந்து தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கி சீர் கெடும் வகையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விழுப்புரம் சிறுமி பாலியல் சீண்டல்.. பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

Follow Us