AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என சொன்னதும் துள்ளிக்குதித்தார் உதயநிதி.. மே. 4 ஆம் தேதி இதுதான் நடந்தது – மாணிக்கம் தாக்கூர்..

தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசியிருக்க வேண்டும். கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு, அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஆதரவு தர உதயநிதி துடித்தார் என்பதுதான் நிதர்சனம். எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும்” என உறுதியாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என சொன்னதும் துள்ளிக்குதித்தார் உதயநிதி.. மே. 4 ஆம் தேதி இதுதான் நடந்தது – மாணிக்கம் தாக்கூர்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 May 2026 14:54 PM IST

மே 24, 2026: நேற்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக காங்கிரஸை விமர்சித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசியபோது, “மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டிருந்தது. பா.ஜ.க.வின் முக்கிய தலைவர் ஒருவர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினருக்கு இடையே ‘கனெக்டிங் கால்’ ஏற்படுத்தியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்றதும் துள்ளுக்குதித்தவர் உதயநிதி:

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அதற்கு மனப்பூர்வமான சம்மதம் தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என கூறியதும், உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்தார். இதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் தமிழக வெற்றி கழக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

மேலும் படிக்க: “திமுக முதுகில் குத்திய காங்கிரஸ், முதல்வர் விஜய் முதுகிலும் குத்தும்” .. தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை!

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் திட்டத்தை உடைத்தது காங்கிரஸ்தான். அதனால்தான் தி.மு.க.வுக்கு இவ்வளவு கோபமும் காழ்ப்புணர்ச்சியும் உள்ளது. வெளியில் சொன்னால் தவறாகிவிடும் என்பதால் இதுவரை அமைதியாக இருந்தோம்.

உதயநிதி அளந்து பேச வேண்டும்:

தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசியிருக்க வேண்டும். கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு, அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஆதரவு தர உதயநிதி துடித்தார் என்பதுதான் நிதர்சனம். எதிர்காலத்தில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும்” என உறுதியாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: சர்ச்சையான அந்த சிரிப்பு.. பின்னணி இதுதான்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் கீர்த்தனா!

நேற்று நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், “இந்திய அளவில் பா.ஜ.க.வின் தொடர் வெற்றிக்குக் காரணம் மோடியோ, அமித்ஷாவோ அல்ல; காங்கிரஸ்தான். மேலும், நம் தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் போட்ட ஓட்டில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், பதவிக்காக சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விட்டார்கள். குறைந்தபட்ச நன்றியும் நாகரிகமும் இல்லாத காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் நான் நம்பமாட்டேன். அவர்களுக்கு சரியான பாடத்தை நாம் கற்றுக்கொடுக்கிறோமோ இல்லையோ, தமிழ்நாடு மக்கள் நிச்சயம் கற்றுக்கொடுப்பார்கள்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us