AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கத்தியதால் கழுத்தை நெறித்தேன்.. உடலை முள்புதரில் வீசினேன்”.. கோவை சிறுமி கொலையில் குற்றவாளி பகீர் வாக்குமூலம்!

Coimbatore Girl Murder Accused Confession : கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலிய் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், சிறுமியை கொலை செய்யதது தொடர்பாக குற்றவாளி கார்த்திக் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

“கத்தியதால் கழுத்தை நெறித்தேன்.. உடலை முள்புதரில் வீசினேன்”.. கோவை சிறுமி கொலையில் குற்றவாளி பகீர் வாக்குமூலம்!
கோவை சிறுமி கொலை குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 May 2026 07:05 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அந்த பகுதியில் வசித்து வந்த நபர் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று அந்தப் பகுதியில் உள்ள காட்டில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதில், போலீசாரை பார்த்து கார்த்திக் தப்பி செல்ல முயன்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் அவரது வலது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிறுமி கொலை குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

இந்த நிலையில், அவர் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கைதிகளுக்கான சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம், சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு: சூலூரில் சம்பவத்தன்று வீட்டின் முன் அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சாக்லேட் வாங்கித் தருவதாக கூறியதால், பழக்கத்தின் அடிப்படையில் என்னுடன் பைக்கில் வந்தார். அப்போது, அந்த சிறுமியை அதே பகுதியில் உள்ள குளத்து கரைக்கு அழைத்துச் சென்றேன்.

மேலும் படிக்க: சர்ச்சையான அந்த சிரிப்பு.. பின்னணி இதுதான்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் கீர்த்தனா!

சிறுமி கத்தியதால் கழுத்தை நெறித்து கொன்றேன்

அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன். அப்போது, சிறுமி அதிக சத்தம் போட்டார். அவரை சத்தம் போடக்கூடாது என்று மிரட்டினேன். அதையும் மீறி சிறுமி அலறல் சத்தம் போட்டார். இதனால், யாரிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். இதைத்தொடர்ந்து, சிறுமியை அந்தப் பகுதியில் உள்ள முள் புதரில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பு சென்று விட்டேன்.

சிறுமியின் உடலை முள்புதரில் வீசி விட்டேன்

இது தொடர்பாக வரும் வழியில் எனது நண்பன் மோகன் ராஜிடம் நடந்த விவரத்தை கூறி உதவி கேட்டேன். அவரும் இந்த சம்பவத்தை மறைக்க உதவி செய்தார். பின்னர், சிறுமியின் வீட்டு பகுதியில் நின்று கொண்டு என்ன நடக்கிறது என்பதை நோட்டமிட்டேன். அப்போது, சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மற்றும் போலீசார் தேடியபோது அவர்களுடன் சேர்ந்து நானும் எதுவும் தெரியாதது போல தேடினேன். ஆனால், போலீசார் விசாரணையில் என்னை கைது செய்து விட்டனர்.

மேலும் படிக்க: திருச்செங்கோட்டில் டிஜிட்டல் யுகம்.. பொதுமக்கள் குறைகளை தீர்க்க வருகிறது புதிய ஆப்.. அருண்ராஜ் அளித்த நற்செய்தி!

Follow Us