AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்கிட்ட சொல்லாமலே எரிச்சுட்டாங்க – கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் பரபரப்பு தகவல்

கோவையில் கொலை செய்யப்பட்ட கோவை சிறுமியின் தாயார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இறந்துபோன என் குழந்தையை போஸ்ட் மார்டம் பண்ண பிறகு என் கண்ணுல காட்டவே இல்லை. எனக்கே தெரியாமல் பின் வாசல் வழியாக உடலை ஆம்புலன்ஸில் அனுப்பி வச்சிட்டாங்க. என்னிடம் சொல்லாமலே கணவர் குடும்பத்தினர் எரித்துவிட்டார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

என்கிட்ட சொல்லாமலே எரிச்சுட்டாங்க – கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் பரபரப்பு தகவல்
கோவையில் கொலைசெய்யப்பட்ட சிறுமி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 May 2026 22:37 PM IST

சென்னை, மே 24 : கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிறுமியின் தாய் மே 24, 2026 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இறந்துபோன என் குழந்தையை போஸ்ட் மார்டம் பண்ண பிறகு என் கண்ணுல காட்டவே இல்லை. எனக்கே தெரியாமல் பின் வாசல் வழியாக உடலை ஆம்புலன்ஸில் அனுப்பி வச்சிட்டாங்க. என்னிடம் சொல்லாமலே கணவர் குடும்பத்தினர் எரித்துவிட்டார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

கோவையில் கொலைசெய்யப்பட்ட சிறுமியின் தாய் பரபரப்பு தகவல்

மேலும் பேசிய அவர்,  ஒருவேளை எரிக்காமல் புதைத்து இருந்தால் இறப்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தோண்டி எடுத்துப் பார்த்திருக்க முடியும். ஆனால், இப்போது எனக்கே தெரியாமல் எரிச்சுட்டாங்க. என்னுடைய கணவர் மற்றும் அவரின் உடன் இருந்தவர்கள் மீது நான் குற்றம் சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : கோவை சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல்.. கடுமையான தண்டனை கிடைக்க உறுதி!

கோவையில் மாலையில் வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் அடுத்த நாள் வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள குளத்தில் இறந்த நிலையில் சிறுமி மீட்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிககளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் கார்த்தி என்ற இளைஞர் அந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்ற பதிவாகியிருக்கிறது. இதனையடுத்து அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் ராஜ் என்பவரையும் கைது செய்தனர். இந்த நிலையில் சிறுமி காணாமல் போன அன்று மோகன் ராஜும் சிருமி பெற்றோர்களுடன் தேடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அழைத்து சென்று வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இருவருக்கும் மே 27, 2026 வரை காவல் நிலையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : காவல் நிலையத்தில் காமுகத்தனம்.. புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ்.. எஸ்.ஐ-க்கு அதிரடி ஆப்பு!

இதற்கிடையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரிடையே பேசிய முதல்வர் விஜய், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார். இந்த நிலையில் தான், சிறுமியை தன்னிடம் காட்டாமலே எரித்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us