AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல்.. கடுமையான தண்டனை கிடைக்க உறுதி!

தமிழகம் முழுவதும் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்திய இந்த வழக்கில், காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாகவே அண்டை வீட்டுக்காரரான கார்த்தி மற்றும் அவனது நண்பன் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவை சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல்.. கடுமையான தண்டனை கிடைக்க உறுதி!
முதல்வர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 May 2026 13:41 PM IST

கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொலைபேசி மூலமாக நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி, தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, கோவையில் தங்கியிருந்த கார்த்தி (33) என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த கொலைக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கார்த்தியின் நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் படிக்க: மீண்டும் எகிறியது சுங்க கட்டணம்.. அதிர்ச்சியில் தமிழக வாகன ஓட்டிகள்.. எவ்வளவு உயர்வு தெரியுமா?

தொலைபேசியில் பேசிய முதல்வர்:

இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் விஜய், தங்களுக்கு நேர்ந்த ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு ஆறுதல் கூறினார். மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை நிச்சயம் பெற்றுத் தரப்படும் என்று பெற்றோர்களிடம் அவர் உறுதியளித்துள்ளார். இதனைத் துயரத்தில் இருக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களே ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பிற்குத் தனி கவனம்:

இச்சம்பவம் குறித்து ஏற்கனவே நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த முதலமைச்சர் விஜய், “இனிவரும் காலங்களில் இது போன்ற கொடூரமான நிகழ்வுகள் தமிழ்நாட்டில் எங்குமே நடக்காத வண்ணம் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு எப்போதும் தனி கவனம் செலுத்தும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

24 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை:

தமிழகம் முழுவதும் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்திய இந்த வழக்கில், காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாகவே அண்டை வீட்டுக்காரரான கார்த்தி மற்றும் அவரது நண்பன் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், தப்பியோட முயன்றபோது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட மற்றொருவர் போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க: திருச்சி செவிலியர் மாணவி உயிரிழப்பு… தீவிர விசாரணையில் சிறப்பு குழு.. விரைவில் அறிக்கை தாக்கல்!

குற்றவாளிகள் விரைவாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதலமைச்சர் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow Us