மீண்டும் எகிறியது சுங்க கட்டணம்.. அதிர்ச்சியில் தமிழக வாகன ஓட்டிகள்.. எவ்வளவு உயர்வு தெரியுமா?
Tamil Nadu Toll Fees Hike : தமிழகத்தில் உள்ள 60 சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வில் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 60 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்க சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு எதிராக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சுங்க சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனிடையே, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக சுங்க கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்க கட்டண உயர்வு
அதன்படி, தமிழகத்தில் உள்ள 60 சுங்க சாவடிகளில் நேற்று சனிக்கிழமை ( மே 24- ஆம் தேதி) முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வு காரணமாக முக்கிய நகரங்களுக்கு இடையேயான சாலை வழி பயண செலவு அதிகரித்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலான சுங்க சாவடிகள் சென்னையின் புறநகர் பகுதிகள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் அமைந்துள்ளன. இதில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் ஆகிய சுங்க சாவடிகளும், தாம்பரம் புறவழி சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடியும் அடங்கும்.
மேலும் படிக்க: கோவை சிறுமி கொலை சம்பவம்: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரபரப்பு கடிதம்!




சென்னை புறவழிச்சாலை சுங்கச்சாவடிகளில்…
இந்த சுங்க சாவடிகள் தவிர சென்னை புறவழி சாலையில் உள்ள நல்லூர், சூரப்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள பட்டறை பெரும்புதூர் மற்றும் தெற்கு பகுதியில் உள்ள சமயபுரம், கப்பலூர் மற்றும் நாங்குநேரி ஆகிய முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளிலும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதே போல, செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்க சாவடியில் கார்களுக்கான கட்டணம் ரூ.75- ஆக தொடர்ந்து வருகிறது. இதில், கட்டணம் உயர்த்தப்படவில்லை.
3 சதவீதம் முதல் 7 சதவீதம் சுங்க கட்டணம் உயர்வு
ஆனால், கனரக வாகனங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுங்க கட்டணத்தில் மாதாந்திர பாஸ் பெறும் இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.5 மற்றும் லாரிகளுக்கான கட்டண் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் இருமுறை சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வானது 3% முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சுங்க கட்டணம் எவ்வளவு உயர்வு
சென்னை – மதுரை இடையே இருவழி பயணத்துக்கு ஒரு காருக்கு சுமார் ரூ.80 கூடுதலாக செலுத்த வேண்டும், சென்னை – கோயம்புத்தூர் பயணத்துக்கு கூடுதல் சுங்க கட்டணம் சுமார் ரூ.100 என்று கூறப்படுகிறது. திருச்சி – சேலம் இருவழி பயணத்துக்கு, செல்லும் வழியை பொறுத்து கார்களுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை கூடுதலாக செலுத்த வேண்டும். இதனால், அரசு பேருந்துகளில் தொலை தூர பயணங்களுக்கு ரூ.300 முதல் ரூ.800 வரை கூடுதல் கட்டணம் ஆகலாம் என்று நடத்துனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: கரூரில் பயங்கரம்.. விவசாயி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.. தீவிர விசாரணையில் போலீஸ்!