AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாணிக்கம் தாக்கூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள் – ஆர். எஸ் பாரதி..

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறிய சில கருத்துகளுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய். காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள். காங்கிரஸ்காரர்கள் தவிர மற்ற அனைவரும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்-ஐ சந்தித்து பேசினார்கள் தெரிவித்துள்ளார்.

மாணிக்கம் தாக்கூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள் – ஆர். எஸ் பாரதி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 May 2026 15:56 PM IST

மே 24, 2026: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய் என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினர் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான சூழலில், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய்:

இந்த சூழலில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறிய சில கருத்துகளுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய். காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள். தேர்தல் முடிவு வந்த பிறகு, காங்கிரஸ்காரர்கள் தவிர மற்ற அனைவரும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்-ஐ சந்தித்து பேசினார்கள். தொலைபேசியில் கூட நன்றி சொல்லாமல் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: “திமுக முதுகில் குத்திய காங்கிரஸ், முதல்வர் விஜய் முதுகிலும் குத்தும்” .. தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை!

மாணிக்கம் தாக்கூர் சொன்னது என்ன ?

இதற்கு முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், உதயநிதி ஸ்டாலின்-ஐ கடுமையாக விமர்சித்து செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது பேசிய அவர், “மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டிருந்தது. அதில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என கூறியதும் துள்ளிக் குதித்தவர் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என சொன்னதும் துள்ளிக்குதித்தார் உதயநிதி.. மே. 4 ஆம் தேதி இதுதான் நடந்தது – மாணிக்கம் தாக்கூர்..

தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேசியிருக்க வேண்டும். இதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் தமிழக வெற்றி கழக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முடிவு செய்தது. தங்களுடைய திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போன காழ்ப்புணர்ச்சியில்தான் அவர்கள் பேசுகிறார்கள். கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு தர உதயநிதி ஸ்டாலின் துடித்தார்” என குறிப்பிட்டிருந்தார். அதற்கு தற்போது தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலளித்துள்ளார்.

Follow Us