விளாத்திக்குளம் மாணவி பாலியல் கொலை வழக்கு.. கொலையாளிக்கு உச்சபட்ச தண்டனையா? போக்ஸோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
Vilathikulam Student Murder Case Verdict: விளாத்திக்குளத்தில் பிளஸ் 2 மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 12- ஆம் வகுப்பு மாணவி. இவர், கடந்த மார்ச் 10- ஆம் தேதி மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றிருந்தார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். இதில், குமாரபுரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்வதற்காக சுமார் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, 98 சிசிடிவி கேமரா காட்சிகள், செல்போன் சிக்னல்கள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டன.
ரவுடி தர்ம முனீஸ்வரனை கைது செய்த போலீசார்
இதில், நாகர்கோவிலை சேர்ந்த ரவுடி தர்ம முனிஸ்வரன் இரு சக்கர வாகனத்தில் சென்றது கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த மாணவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். அதன் அடிப்படையில், அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
மேலும் படிக்க: விழுப்புரத்தில் பயங்கரம்.. மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவர் செய்த கொடூர சம்பவம்.. எமனாக மாறிய மின் மோட்டார்!




மாணவி பாலியல் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
இந்த கொலை வழக்கு தூத்துக்குடி போட்டோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை ( மே 25- ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி தர்ம முனீஸ்வரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட உள்ளார். இதில், குற்றவாளிக்கு என்ன தண்டனை நீதிமன்றம் வழங்க உள்ளது என்பது பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. ஏற்கனவே, கோவை மாவட்டத்தில் மாணவியை பாலியல் சித்திரவதை செய்த சம்பவத்தில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
பழைய போக்ஸோ வழக்கில் ஆயுள் தண்டனை
இதே போல, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தில் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிக்கு என்ன தண்டனையை நீதிமன்றம் வழங்க உள்ளது என்பது இன்று தெரியும்.
மேலும் படிக்க: திருச்சி செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவம்: சகோதரிக்கு பணி ஆணை- வீட்டு மனை பட்டா!