AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்.. சிறுவன் வெட்டி படுகொலை.. 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

madurai Boy Murder : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 5 பேர் கொண்ட கும்பலால் சிறுவன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்.. சிறுவன் வெட்டி படுகொலை.. 5 பேர் கும்பல் வெறிச்செயல்!
கோப்புப்படம் Image Source: social media
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 25 May 2026 08:02 AM IST

மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு, சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் இன்று  திங்கள்கிழமை ( மே 25- ஆம் தேதி) அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பந்தப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் என்பது தெரியவந்தது. இவருக்கும், முத்து மணி என்பவருக்கும் அண்மையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருவர் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

வாகன நிறுத்தும் இடத்தில் வாக்குவாதம்

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ( மே 24- ஆம் தேதி) மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடத்துக்கு சிறுவன் குபேந்திரன் சென்றுள்ளார். அப்போது, முத்து மணி என்பவரும் அங்கு வந்துள்ளார். இந்த நிலையில், சிறுவன் குபேந்திரனுக்கும், முத்து மணிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், முத்து மணிக்கு ஆதரவாக சுமார் 4 பேர் சேர்ந்து கொண்டு சிறுவன் குபேந்திரன் கடுமையாக தாக்கினர். பின்னர், தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் குபேந்திரன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

மேலும் படிக்க: என்கிட்ட சொல்லாமலே எரிச்சுட்டாங்க – கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் பரபரப்பு தகவல்

சிறுவனை கொலை செய்துவிட்டு கும்பல் தப்பியோட்டம்

இதில், சிறுவன் குபேந்திரன் உயிரிழந்ததை உறுதி செய்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து இரு இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்றுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில் முத்துமணி அவரது நண்பர்களான ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேரின் அடையாளங்கள் தெரியவந்தது.

5 பேர் கொண்ட கும்பலை கைது செய்யும் நடவடிக்கை

அதன் அடிப்படையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம்?.. வானிலை ரிப்போர்ட் இதோ..

Follow Us