AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் மூதாட்டிக்கும் பாதுகாப்பில்லாத நிலையா? 80 வயது பாட்டியிடம் வக்கிர புத்தியை காட்டிய காமுகன்.. செல்போனை வைத்து தூக்கிய போலீஸ்!

Thiruvallur Crime: திருவள்ளூர் மாவட்டத்தில் மது போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை திருவள்ளூர் நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மூதாட்டிக்கும் பாதுகாப்பில்லாத நிலையா? 80 வயது பாட்டியிடம் வக்கிர புத்தியை காட்டிய காமுகன்.. செல்போனை வைத்து தூக்கிய போலீஸ்!
திருவள்ளூரில் இளைஞர் கைது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 May 2026 07:32 AM IST

திருவள்ளூர் மாவட்டம், தாவுத்துக்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் உயிரிழந்த நிலையில், மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று அதிகாலை ஒரு மர்ம நபர் மதுபோதையில் திடீரென மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தமிட முயன்றார். உடனே, அந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை சுதாரித்துக் கொண்ட மூதாட்டி அருகில் இருந்த கம்பால் அந்த நபரை தாக்கினார். இதில், மது போதையில் இருந்த அந்த மர்ம நபர் வலி தாங்க முடியாமல் தள்ளாடி கீழே விழுந்தார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவ்வாறு தப்பி ஓடுகையில், அந்த மர்ம நபரின் செல்போன் மூதாட்டியின் வீட்டுக்குள் தவறி விழுந்தது.

சம்பவ இடத்தில் திருவள்ளூர் நகர் போலீசார் விசாரணை

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த செல்போனை உறவினர்களிடம் அளித்துள்ளார். இது தொடர்பாக, மூதாட்டியின் உறவினர்கள் திருவள்ளூர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த மர்ம நபர் தவற விட்டு சென்ற செல்போனையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தை ஆள விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? பொம்மை முதல்வர் என கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

செல்போன் மூலம் சிக்கிய மர்ம நபர்

அந்த செல்போன் தொடர்பாக போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், அதன் உரிமையாளர் மற்றும் அந்த மர்ம நபர் சேலை கிராமத்தை சேர்ந்த பாளையம் மகன் குமரேசன் ( 35 வயது) என்பதும், வண்ணம் பூசும் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், மது போதையில் மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முடிந்ததும் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, குமரேசனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் மூதாட்டிக்கும் பாலியல் தொல்லை

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றங்கள் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு தகுந்த சட்ட நடவடிக்கை மற்றும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்தியில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 80 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியே ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பக்ரீத் – வார இறுதி நாள்.. மக்களே சொந்த ஊர் போறீங்களா? இன்று முதல் 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Follow Us