கன்னியாகுமரியில் பரபரப்பு.. 3 காவலர்களை கூண்டோடு சஸ்பெண்ட் செய்த எஸ்.பி. ஸ்டாலின்!
Kanyakumari 3 Policemen Suspension: கன்னியாகுமரி மாவட்டத்தில கனிமவள லாரிகளின் அனுமதி சீட்டை முறையாக பரிசோதனை செய்யாத 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தினந்தோறும் ஏராளமான கனிம வள லாரிகள் வந்து செல்கின்றன. இந்த லாரிகளில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் கனிம வள லாரிகளை போலீசார் சோதனை செய்ய வேண்டும். அத்துடன், கனிம வள லாரிகளின் அனுமதி சீட்டு ஆகியவற்றை போலீசார் பரிசோதனை மேற்கொண்டு உரிய அனுமதி அளித்த பின்னரே அவர்களை கனிம வளங்களை ஏற்றி செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த நடைமுறையை காவலர்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே கனிம வள லாரிகளின் அனுமதி சீட்டை போலீசார் சோதனை செய்வது இல்லை என்று புகார் எழுந்து வந்தது. இந்த விவகாரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது.
3 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்
அதன் பேரில், உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதில், ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக லாரிகளின் அனுமதி சீட்டு ஆகியவற்றை போலீசார் முறையாக பரிசோதனை செய்யாமல் பணத்தை பெற்றுக் கொண்டு அனுமதி அளித்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவத்தன்று பணியில் இருந்த கோபால், வினோத் உள்பட 3 தலைமை காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க: மர்ம காய்ச்சலுக்கு பச்சிளம் குழந்தை பலி.. தூத்துக்குடியில் நிகழ்ந்த சோகம்.. பீதியில் பொது மக்கள்!




கனிம வள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை
அதன்படி, தலைமை காவலர்கள் 3 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள கொள்ளைகளுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தின் முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகள் மீது கனிமவள லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
நகர பகுதிக்குள் கனிமவள லாரிகள் வர தடை
இந்த விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நகரப் பகுதிக்குள் கனிமவள லாரிகள் வரக்கூடாது என்று மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதேபோல, கனிமவள திருட்டுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மேற்கொண்டிருந்தார். அந்த வகையில், தற்போது 3 தலைமை காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: பள்ளி – கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு… சீருடை – ஐடி கார்டு இருந்தாலே பேருந்தில் இலவச பயணம்!