AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
டாஸ்மாக்கை மூடுங்க... பாமக வேட்பாளர் திலகபாமாவிடம் கோரிக்கை வைத்த பெண்கள்!

டாஸ்மாக்கை மூடுங்க… பாமக வேட்பாளர் திலகபாமாவிடம் கோரிக்கை வைத்த பெண்கள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Apr 2026 10:19 AM IST

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பில் வேட்பாளராக திலகபாமா போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்தபோது, அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி டாஸ்மாக்கை மூட வேண்டும் என்றும், பள்ளி சிறுவர்கள் கூட குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு 4 முனை போட்டிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பில் வேட்பாளராக திலகபாமா போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்தபோது, அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி டாஸ்மாக்கை மூட வேண்டும் என்றும், பள்ளி சிறுவர்கள் கூட குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அப்போது பெரம்பூர் தொகுதி பெண்களிடம் பாமக வேட்பாளர் திலகபாமா, “ஆட்சி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு நான் செயல்படுவேன், டாஸ்மாக்கை மூடுவேன்” என்று உறுதியளித்தார். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது முதலே மதுவிலக்கு வேண்டும் என்று கோரிக்கையை வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us