Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தோஸ்த் படா தோஸ்த்…. 55 ஆண்டுகளாக நண்பனை பிரியாத யானை – வைரலாகும் வீடியோ

Viral Video: யானைகள் மனிதர்களை விட அதிக நினைவாற்றல் கொண்டவை. ஒரு இடத்தில் நீர் இருப்பது தெரிந்தால் அவ்வளவு எளிதில் அதனை யானைகள் மறக்காது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலையில் இரண்டு யானைகள் 55 ஆண்டுகளாக நண்பர்கள் இருந்து வருகின்றன.

தோஸ்த் படா தோஸ்த்…. 55 ஆண்டுகளாக நண்பனை பிரியாத யானை – வைரலாகும் வீடியோ
55 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கும் யானைகள்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Aug 2025 21:28 PM

மனிதர்களைப் போலவே யானைகளும் (Elephant)கூட்டமாக வாழும் ஒரு உயிரினம். அது ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன. அவை எல்லா இடங்களுக்கும் பெரும்பாலும் கூட்டமாகவே பயணிக்கின்றன. அதே போல யானைகள் ஒரு பாதையில் சென்றால், தொடர்ந்து அந்த பாதையில் தான் செல்லும். அதனால் யானைகள் செல்லும் பாதையை யானை வழித்தடங்கள் என அழைக்கப்படுகிறது. அதனால் மனிதர்களுக்கு யானைகள் என்றால் ஆச்சரியம் தான். இந்த நிலையில் 55 ஆண்டுகளாக இரண்டு யானைகள் நண்பர்களாக பழகி வருகின்றன. இதுகுறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் (Instagram) வைரலாகி வருகிறது.

நட்புக்கு இலக்கணமாக இருக்கும் யானைகள்

ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அவர் பகிர்ந்த வீடியோ பாமா, காமாட்சி என்ற இரண்டு யானைகளை பற்றியது.  யானைகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் வாழ்கின்றன. இதில் பாமா என்ற யானைக்கு 75 வயது. அதே போல காமாட்சி என்ற யானைக்கு வயது 65. இரண்டு யானைகளும் 55 ஆண்டுகளாக இணை பிரியாமல் நட்புடன் வாழ்கின்றன.

இதையும் படிக்க : மினி டிரக் வாகனத்தை முட்டி தள்ளிய யானை.. பதற வைக்கும் வீடியோ!

பாமாவும், காமாட்சியும் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சாப்பிடுவது முதல், ஓய்வெடுப்பது வரை அனைத்தையும் செய்கின்றன. கரும்பு வேண்டும் என்றாலும் அவை ஒன்றாகவே வந்து கேட்கின்றன. நாம் சில வருடங்களிலேயே நண்பர்களை மறந்துவிடுவோம். ஆனால் பல ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழ்கிறார்கள். இந்த இரண்டு யானைகள் நட்பு இலக்கணமாக இருந்து வருகின்றன.

வைரலாகும் வீடியோ

 

பொதுவாக யானைகளுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது தெரிந்தால் அது கடைசி வரைக்கும் அந்த இடத்தை மறக்காது. அதே போல் அவர்கள் மனிதர்களின் முகங்கள், குரல்கள் ஆகியவற்றை நினைவில்கொள்ள முடியும். குறிப்பாக அதற்கு யார் நண்பர்கள், யார் எதிரி என்பது நன்றாக தெரியும்.

இதையும் படிக்க : பள்ளிக்கு குதிரையில் செல்லும் சிறுவன்.. வியக்கவைக்கும் சுவாரஸ்ய வீடியோ!

யானைகள் ஜிபிஎஸ் போன்று பாதைகளை துல்லியமாக மதிப்பிடும் திறன் கொண்டவை. குறிப்பாக 1000 கி.மீ தூரம் வரையிலான பாதையை அவை துல்லியமாக மதிப்பிட முடியும். யானைகளுக்கு நுகரும் திறனும் அதிகம். குறிப்பாக தன் கூட்டத்தில் யானைகள் இறந்தால் அதுவும் மனிதர்களைப் போல மிகுந்த சோகமாக காணப்படும்.

நெட்டிசன்களின் ரியாக்சன்ஸ்

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சிலர் வீடியோவுக்கு கீழ் நண்பர்களை டாக் செய்து, இதுபோல கடைசி வரை நாங்களும் நண்பர்களாக வாழ வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.