Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மன அமைதியே போச்சு…. வங்கி வேலையை விட்ட பெண் – வைரலாகும் வீடியோ

In a Shocking Decision: இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலைக்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் வேலையில், டெல்லியை சேர்ந்த ஒரு பெண் தனது அரசு வங்கி வேலையை விட்டு விலகியுள்ளார். இதற்காக அவர் சொன்ன காரணம் தான் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மன அமைதியே போச்சு…. வங்கி வேலையை விட்ட பெண் – வைரலாகும் வீடியோ
வங்கி வேலையை விட்ட பெண்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Sep 2025 21:35 PM

இந்தியாவில் நூற்றில் 80 பேரின் கனவு அரசு வேலை. காரணம் வேலை நிலையானதது. எப்போது பணி நீக்கம் செய்யப்படுவோம் என்ற கவலை இல்லை. மாதம் முதல் தேதியே நம் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். அரசு வேலைக்காக இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள், பல வருடங்களாக இரவு பகலும் கடினமாக உழைத்து வருகிறார்கள். இருப்பினும் எல்லோருக்கும் வேலை கிடைக்குமா என்றால் அதுவும் கஷ்டம் தான். இப்படி அரசு வேலையை பலரும் கனவாக வைத்திருக்கும் நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு பெண் தனது அரசு வங்கி (Bank) வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்காக அவர் சொன்ன காரணம் தாதன் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த 29 வயது பெண் வாணி மிகவும் கடினமாக உழைத்து வங்கி வேலையைப் பெற்றார். இன்றைய காலகட்டத்தில், வங்கி வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் கடந்த 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை கிடைத்தது. வங்கி வேலை அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. இரவு, பகல் பார்க்காமல் கடினமாக படித்து இந்த வேலை அவருக்கு கிடைத்தது.   மீரட்டில் ஸ்கேல் ஒன் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வங்கியின் கடன் பிரிவில் அவருக்கு பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

வங்கி வேலையை விட்ட பெண்

ஆனால் வேலையில் சேர்ந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ராஜினாமா செய்தார். அவரது முடிவால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவ்வளவு நல்ல வேலையை ஏன் விட்டு ஏன் விலகுகிறார் என்ற கேள்விகள் எழுந்தன.  இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அவரது பதிவில், வங்கி வேலையில் சேருவதற்கு முன்பு, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார். வேலையில் சேர்ந்த மூன்று ஆண்டுகளில் தனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

வாணியின் வைரலாகும் பதிவு

 

மேலும் அவர் தன்னைத்தானே வெறுக்கும் நிலையை அடைந்துவிட்டதாக அவர் கூறினார். எரிச்சல் மற்றும் சலிப்பு காரணமாக தான் மன அமைதியை இழந்துவிட்டதாக அவர் கூறினார். இதற்கெல்லாம் காரணமான தனது வேலையை விட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தனக்கு விருப்பமில்லாத ஒரு இடத்தை விட்டு வெளியேறுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி அவ்வளவு பெரியதல்ல என்றும் வாணி கூறினார். தனது முடிவுக்கு வருத்தப்படவில்லை என்றும், உண்மையில் இது தனது கனவு வேலை என்றும் அவர் கூறினார். இதற்காக தான் மிகவும் கடினமாக உழைத்ததாகவும், ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது என்றார்.