Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெற்கு ரயில்வேயில் 3538 அப்ரண்டிஸ் பணியிடங்கள் – எப்படி விண்ணப்பிப்பது ?

Southern Railway : தெற்கு ரயில்வே காலியாக உள்ள 3538 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்களுக்கு கடைசி தேதி செப்டம்பர் 25, 2025 அன்று அறிவிக்கப்ப்டடுள்ளது. அதுகுறித்து விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தெற்கு ரயில்வேயில் 3538 அப்ரண்டிஸ் பணியிடங்கள் – எப்படி விண்ணப்பிப்பது ?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Sep 2025 15:23 PM

உலகின் மிகப்பெரிய ரயில் (Train) போக்குவரத்து கொண்ட நாடு இந்தியா. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள்.  நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் ரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகிறார்கள். மேலும் ரயில் போக்குவரத்து எந்த தடங்கலும் இல்லாமல் செயல்பட ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் 3,538 அப்ரண்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 25, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் விண்ணப்பிக்கும் முறை, தகுதி போன்ற விவரங்களை பார்க்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது ?

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் sr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணிப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 25, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் விண்ணப்பிப்பது மிகவும் அவசியம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.  இந்த பணிக்கு விண்ண்ப்பிப்பவர்கள் ஐடிஐ முடித்தவர்கள் 22 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் மெடிக்கல் லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்க : ரயில் டிக்கெட் முன்பதிவில் 20% தள்ளுபடி – எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!

தேர்வு நடைமுறை

  • ஃபிரெஷர் பிரிவில் விண்ணப்பிக்கிறவர்கள் 10 ஆம் வகுப்பில் 50 சதவிகிதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதே போல ஐடிஐ கேட்டகிரியில் விண்ணப்பிப்பவர்கள் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களுக்கு மாற்றி கணக்கிடப்படும். அதே போல பத்தாம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் சேர்ந்து மதிப்பிடப்படும்.
  • அதே போல மெடிக்கல் லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் ஆகிய மதிப்பெண்கள் கணக்கிடப்படும். கூடுதலாக 10 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்சொன்ன விதிகளின் படி தகுதியானவர்கள், தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : கடைசி நிமிடத்திலும் ரயில் டிக்கெட் புக் பண்ணலாம் – கரண்ட் புக்கிங் பற்றி தெரியுமா?

விண்ணப்பக் கட்டணம்

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டியிருக்கும். கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். அதே போல எஸ்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 25, 2025 அன்று வெளியிடப்பட்டது. இதற்கு கடைசித் தேதி செப்டம்பர் 25, 2025 அன்று குறிப்பிடப்பட்டுள்ளதால், வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.