Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியா மீதான வரி ரத்தாகுமா? நீதிமன்றம் போட்ட தீர்ப்பு… கொதித்தெழுந்த டிரம்ப்!

Donald Trump On Tariffs : அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வரிகளை விதிப்பதன் மூலம் தனது அதிகாரத்தை டிரம்ப் மீறியதாகவும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவு பாரபட்சமானவை என டிரம்ப் தெரிவித்தார்.

இந்தியா மீதான வரி ரத்தாகுமா? நீதிமன்றம் போட்ட தீர்ப்பு… கொதித்தெழுந்த டிரம்ப்!
டொனால்டு டிரம்ப்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Aug 2025 11:15 AM

அமெரிக்கா, ஆகஸ்ட் 30 :  அமெரிக்க அதிபர் டிரம்ப்  (US President Trump) விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. புதிய வரி ரத்து செய்யப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்தே பல்வேறு நாடுகள் மீது வரிகளை அள்ள வீசி வருகிறார். குறிப்பாக, இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டிய அவர், இந்தியா மீது 25 சதவீத வரிகளை விதித்தார். இது அமெரிக்க இந்தியா இடையே வர்த்தக மோதலை ஏற்படுத்தியது. இந்த 50 சதவீத வரியால் இந்தியா கடும் பாதிப்பை சந்திக்கும் என  பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.  இந்த வரி விதிப்பதால் பல்வேறு தொழில்கள் ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்தள்ளனர். 

இப்படியான சூழலில், அமெரிக்கா அதிபர் டிரம்பின் வரியை சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.  2025 ஆகஸ்ட் 29ஆம் தேதி வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பெடரல் சர்க்யூட்டுக்கான அமெரிக்க நீதிமன்றம், டிரம்ப் வரிகளை விதிப்பதன் மூலம் தனது அதிகாரத்தை மீறியதாகவும், இதை அவர் வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் பயன்படுத்தி வருகிறார் எனவம் கூறியது. மேலும், அறிவிக்கப்பட்ட அவசர நிலையின்போது, அதிபருக்கு அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அந்த அதிகாரங்களில் வெளிப்படையாக வரிகளை விதிப்பது அல்லது பரஸ்பர வரிகளை விதிப்பது அடங்காது என நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

Also Read : உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது.. டிரம்ப் கருத்து!

கொதித்தெழுந்த டிரம்ப்


அதேநேரம், உச்ச நீதிமன்றத்தை அணுக டிரம்ப் நிர்வாகத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்துநீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து வரிகளும் இன்னும் நடைமுறையில் உள்ளன. உயர் பாகுபாடான மேல்முறையீட்டு நீதிமன்றம் நமது வரிகளை நீக்க வேண்டும் என்று தவறாகக் கூறியது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் மிகவும் பாரபட்சமானவை. உச்ச நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும். இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த வரிகள் எப்போதாவது நீக்கப்பட்டால், அது நாட்டிற்கு முழுமையான பேரழிவாக இருக்கும். இது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும். மேலும் நாம் வலுவாக இருக்க வேண்டும்.

Also Read : அதிபர் டிரம்பின் வரி விதிப்பு.. அமெரிக்காவிற்கான தபால் சேவையை நிறுத்திய இந்தியா..

வர்த்தக பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டு வர்த்தக தடைகளை எதிர்கொள்வதற்கு சுங்க வரிகள் சிறந்த வழியாகும்நமது உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் மற்ற அனைவரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், நண்பரோ அல்லது எதிரியோ பிற நாடுகளால் விதிக்கப்படும் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறைகள், நியாயமற்ற வரிகள் மற்றும் வரி அல்லாத வர்த்தக தடைகளை அமெரிக்கா இனி பொறுத்துக்கொள்ளாது. இந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அமெரிக்காவை அழித்துவிடும்” எனக் கூறினார்.