Viral Video : சன்ரூஃபை திறந்து வேடிக்கை பார்த்த சிறுவன்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!
Boy Injured in Car Sunroof Accident | சாலையில் பயணம் செய்யும் சிலர், காரின் சன்ரூஃபை திறந்து வேடிக்கை பார்த்தபடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், சிறுவன் ஒருவர் சன்ரூஃபை திறந்து வேடிக்கை பார்த்தபடி சென்றபோது விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பரவலாக பயன்பாட்டின் காரணமாக உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடைபெற்றாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இவ்வாறு இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் சில நம்மை ஆச்சர்யப்படுத்தினாலும், சில நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக அமையும். அந்த வகையில், காரின் சன்ரூஃபை (Sunroof) திறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்ற சிறுவன் சாலையின் தடுப்பு கம்பி மீது மோதும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையின் தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளான சிறுவன் அதிர்ச்சி சம்பவம்
தற்போதைய காலக்கட்டத்தில் கார்கள் அதிநவீன வசதிகளுடன் அறிமுகம் செய்யப்படுகின்றன. அத்தகைய வசதிகளில் ஒன்றுதான் சன்ரூஃப். இந்த தொழில்நுட்ப அம்சத்தை பயன்படுத்தி காரின் மேற்பகுதியை திறந்து, காரில் நின்றுக்கொண்டே பயணம் செய்யலாம். எங்கேனும் சுற்றுலா செல்லும்போது இயற்கை காட்சிகளை ரசிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவ்வாறு சன்ரூஃபை திறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம் சம்பவத்தின் வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : என்ன ஒரு புத்திசாலித்தனம்! ரயிலில் கையோடு ஏர் கூலர் எடுத்து சென்ற நபர் – வைரல் வீடியோ
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Trigger Warning ⚠️:
Leaving your Kids Popping their Heads out of the Sunroof, always Risky.
A boy pops out of moving car’s #Sunroof, hits the overhead barrier in #Bengaluru
He suffered a serious head injury.#CarSunroof
pic.twitter.com/wd3sRGZWDJ— Surya Reddy (@jsuryareddy) September 8, 2025
இரும்பு கம்பி மீது மோதிய சிறுவன்
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலை ஒன்றில் சிவப்பு நிற கார் ஒன்று பயணம் செய்கிறது. அந்த கார் ஒரு சாலையின் வலைவில் திரும்பும்போது, அதில் இருந்து ஒரு சிறுவன் சன்ரூஃபை திறந்து வெளியே எட்டி பார்க்கிறார். அப்போது அந்த சாலையின் வளைவில் உள்ள இரும்பு கம்பி மீது பலமாக மோதுகிறார். சிறுவன் மோதியதும் கார் நிற்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள எக்ஸ் கணக்கில் அந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.