Viral Video : வேற வழியே இல்ல.. Traffic-ல் இருந்து தப்பிக்க ஸ்கூட்டரை தூக்கிச் சென்ற இருவர்.. வைரல் வீடியோ!
Men carried scooter on shoulder | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இருவர் ஸ்கூட்டரை தோலில் சுமந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, டெல்லி உள்ளிட்ட பெரிய நகரங்களில் மழை பெய்தால் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்படும். பொதுவாகவே இந்த நகரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவும் நிலையில், மழை என்றால் சொல்லவே வேண்டாம். வாகன ஓட்டிகள் பல மணி நேரம் சாலையிலே நின்றுக்கொண்டு இருக்கும் நிலை கூட ஏற்படும். டெல்லியின் குருகிராம் பகுதியில் அத்தகைய கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவிய நிலையில், வாகன ஓட்டி ஒருவர் பிற வாகன ஓட்டிகளை வியக்கவைக்கும் செயலை செய்துள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடும் போக்குவரத்து நெறிசலால் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்
அதிக மக்கள் வாழும் நகரமாக உள்ளது. இதன் காரணமாக அங்கு சாதாரன நாட்களில் கூட போக்குவரத்து நெரிசல் மிகுதியாக இருக்கும். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. அந்த வகையில் டெல்லியின் குருகிராம் பகுதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை வாகன ஓட்டிகள் சாலையில் நின்றுக்கொண்டு இருந்த நிலையில், பொறுமையை இழந்த நபர் ஒருவர் வேறு ஒருவரின் உதவியுடன் ஸ்கூட்டரை தலை மீது தூக்கிச் சென்றுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : தாய் அன்பிற்கே ஈடேதம்மா.. குட்டி யானைக்கு கரும்பை உடைத்து கொடுக்கும் தாய் யானை.. அழகிய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சாலையில் மிக நீண்ட தூரம் வாகனங்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றன. அப்போது இருவர் ஸ்கூட்டரை தோலில் சுமந்து செல்கின்றனர். அவர்களை பார்க்கும் நபர்கள் கடும் வியப்பில் ஆழ்ந்துபோகின்றனர். ஆனால், அவர்கள் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிச் சென்றால் போதும் என்பதை போல அவர்கள் ஸ்கூட்டரை தோல் மீது எடுத்து வைத்துக்கொண்டு செல்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : வானை பிளந்துக்கொண்டு பயங்கர சத்ததுடன் தாக்கிய மின்னல்.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய இளைஞர்கள்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிச்னகள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், குருகிராம் போக்குவரத்தில் இருந்து தப்பிச் செல்ல இதுதான் ஒரே வழி என்று பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.