Viral Video : சஃபாரி சென்ற வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டிய யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
Elephant Chases Safari Jeep | இணையத்தில் ஒவ்வொரு நாளும் யானைகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், உயிரியல் பூங்காவில் சஃபாரி சென்ற வாகனத்தை யானை துரத்தும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

யானைகள் எந்த அளவுக்கு சாதுவானதாக இருக்கின்றனவோ அதே அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமான மிருகங்களாகவும் இருக்கும். காரணம், யானைகள் மிகவும் கூறிய உணர்திறன் கொண்டு இருக்கும். இந்த நிலையில், அவை தங்களுக்கு ஏதேனும் தொந்தரவு என நினைத்தால் அதனை விரட்ட முயற்சி செய்யும். அந்த வகையில், விலங்குகள் காப்பாகத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு சஃபாரி சென்ற வாகனத்தை யானை விரட்டி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
சஃபாரி வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்திய யானை – வைரல் வீடியோ
யானைகள் தனிமையாகவும், அமைதியாகவும் வாழ விரும்பும் உயிரினங்கள் ஆகும். இந்த நிலையில், அவற்றின் அமைதியை தொந்தரவு செய்யும் வகையில் யாரேனும் நடந்துக்கொண்டால் அவர்களை சும்மாவே விடாது. இதன் காரணமாக யானைகள் சில மனிதர்களையும், வாகனங்களையும் துரத்தி செல்லும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சஃபாரி செல்லும் வாகனத்தை யானை துரத்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : விநாயகர் சதுர்த்தி: லண்டனில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் பக்தர்கள் – சர்ச்சையான வீடியோ
இணையத்தில் வைரலாகும் வீடியோ
ಸಫಾರಿ ವಾಹನದ ಮೇಲೆ ಕಾಡಾನೆ ದಾಳಿಗೆ ಯತ್ನ | Chamraja nagara | Wild Elephant
.
.
.
.
.#bandipurtigerreserve #elephant #chamrajnagar #elephantattack pic.twitter.com/K9EwiwqYpO— Sanjevani News (@sanjevaniNews) September 7, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் உயிரியல் பூங்கா ஒன்றில் யானை ஒன்று சாலை ஓரம் நின்றுக்கொண்டு இருக்கிறது. அப்போது அந்த சாலை வழியாக சஃபாரி வாகனம் ஒன்று சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. அப்போது, வாகனத்தை காணும் அந்த யானை மிகவும் ஆக்ரோஷமாக வண்டியை துரத்த தொடங்குகிறது. இதனால் அச்சமடையும் அந்த ஓட்டுநர் வாகனத்தை பின்பக்கமாக இயக்குகிறார். ஆனால், அந்த யானை விடாமல் அந்த வாகனத்தை துரத்துகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : பட்டு உடையுடன் ஓணம் கொண்டாடிய நாய் குட்டி.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர் இயற்கை நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அது நம்மை தொந்தரவு செய்யாது என பதிவிட்டுள்ளார். இயற்கை எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என்று மற்றொருவர் கூறியுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.