அமெரிக்காவில் திருடி மாட்டிக்கொண்ட இந்திய பெண் – வைரலாகும் வீடியோ
Indian Woman Caught Stealing: அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடை ஒன்றில் திருடி மாட்டிக்கொண்டார். அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடந்தது என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவில் (America) உள்ள கடையில் திருடும் போது பிடிபட்ட ஒரு இந்தியப் பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காட்சிகள் ஒரு போலீஸ் அதிகாரியின் பாடிகேமில் பதிவாகியுள்ளன. அதில், கையும் களவுமாக பிடிபட்ட பிறகு விசாரணையின் போது அந்த இளம் பெண் அழுது மன்னிப்பு கேட்பதைக் காணலாம். உண்மையில், இந்த சம்பவம் ஜனவரி 15, 2025 அன்று நடந்தது. இப்போது, இந்த வீடியோ யூடியூப் (Youtube) சேனலில் பகிரப்பட்ட பிறகு விவாதப் பொருளாக மாறியுள்ளது. வைரலாகும் இந்த வீடியோவில், அந்தப் பெண் காவல்துறை அதிகாரிகள் முன் அழுது மன்னிப்பு கேட்பதைக் காணலாம். அந்தப் பெண் சுமார் 40 நிமிடங்கள் அழுதபடி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க கடையில் திருடி மாட்டிக்கொண்ட இந்திய பெண்
இந்த வீடியோவில், அந்தப் பெண்ணிடம் அவரது மொழி குறித்து கேட்டபோது, அவர் அழுது கொண்டே, தான் குஜராத்தி என்றும், தான் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். மொழிபெயர்ப்பாளரின் உதவியையும் அவர் பெற மறுத்துவிட்டார். காவல்துறை விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு வாஷிங்டன் ஓட்டுநர் உரிமம் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையின் போது, அவர் கடந்த காலத்தில் அதே கடையில் இருந்து திருடியது கண்டறியப்பட்டது. இருப்பினும், காவல்துறையினர் அவரைப் பிடித்தது இதுவே முதல் முறை. திருடப்பட்ட பொருட்களை விற்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.




இதையும் படிக்க : குருகிராமில் 1BHK வீட்டின் மாத வாடகை ரூ.1.2 லட்சமா? ரஷ்ய பெண் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
வைரலாகும் வீடியோ
An Indian girl (Gujarati) was caught shoplifting in the US. She’s arrested. This was viral on TikTok. pic.twitter.com/huJK9gAeZQ
— Lord Immy Kant (@KantInEastt) September 7, 2025
ஊடகங்களில் வெளியான செய்தியின் படி, காவல்துறையினர் அந்தப் பெண்ணை எச்சரித்த பிறகு விடுவித்தனர். இருப்பினும், அந்த இளம் பெண் மீண்டும் கடையில் காணப்பட்டால், அத்துமீறி நுழைந்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிக்க : ஸ்விக்கியை மிஸ் செவேன்.. அமெரிக்க பெண் வெளியிட்ட வீடியோ வைரல்!
முழு வீடியோவையும் இங்கே பாருங்கள் இந்த வருடம், இல்லினாய்ஸில் உள்ள மற்றொரு இந்திய பெண் ஒரு கடையில் இருந்து 1,300 டாலர் மதிப்புள்ள பொருட்களைத் திருடி, பிடிபட்ட பிறகு பணத்தைக் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த சர்ச்சைக்கு பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலானது. பலரும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.