Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம் – அதிபர் டிரம்ப் அதிரடி..

US President Trump: அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மிகவும் இருண்ட மற்றும் ஆழமான சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கட்டும்” என தெரிவித்துள்ளார்

இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம் – அதிபர் டிரம்ப் அதிரடி..
அதிபர் டிரம்ப்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Sep 2025 20:13 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செப்டம்பர் 5, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “மிகவும் இருண்ட மற்றும் ஆழமான சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளமான எதிர்காலத்தை கொண்டாடட்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரஷ்யாவுடன் வணிகம் செய்வதால், மறைமுகமாக உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதி வழங்குவதாக இந்தியா மீது டிரம்ப் குற்றம் சாட்டினார். இதற்காக இந்தியா மீது அவர் 50 சதவீத வரி விதித்துள்ளார். மேலும், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்தவே இந்த அழுத்தத்தை அளிப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த 50% வரிவிதிப்பு இந்தியாவின் பல துறைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் – 3 நாட்டு தலைவர்கள்:

சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதே மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் வ்லாடிமிர் புதினும் கலந்து கொண்டார். பிரதமர் மோடியும் அதிபர் புதினும் ஒரே காரில் மாநாட்டு வளாகத்திற்குச் சென்றனர். மேலும், பல்வேறு விஷயங்கள் குறித்துப் சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த மாநாட்டின் போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய மூவரும் சிரித்து பேசி கலந்துரையாடினர்.

மேலும் படிக்க: 7.8% வளர்ச்சி… சவால்களை மீறி இந்தியா முன்னேற்றம்… டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில்

இந்தியா மீது அமெரிக்கா 50% வரிவிதிப்பை அறிவித்த பிறகு, சீனாவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியது. மேலும் மூன்று நாட்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்து இருக்கக்கூடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டோம் – அதிபர் டிரம்ப்:

அதனைத் தொடர்ந்து, டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மிகவும் இருண்ட மற்றும் ஆழமான சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கட்டும்” என தெரிவித்துள்ளார். சமீபத்தில், திரு. டிரம்பின் உயர்மட்ட வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ, மூன்று தலைவர்களுக்கும் இடையிலான நல்லுறவை தொந்தரவு” என்று அழைத்தார்.

மேலும் படிக்க: இந்தியாவுக்கு கூடுதல் சலுகையுடன் கச்சா எண்ணெய்.. ரஷ்யா எடுத்த முக்கிய முடிவு!

அமெரிக்க அறிக்கையை நிராகரித்த இந்தியா:

அதிபர் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவு குறித்து வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ நவரோவின் தவறான மற்றும் அறிக்கைகளை நாங்கள் கண்டோம் , மேலும் அவற்றை வெளிப்படையாக நிராகரிக்கிறோம்” என்றார்.