இந்தியாவுக்கு கூடுதல் சலுகையுடன் கச்சா எண்ணெய்.. ரஷ்யா எடுத்த முக்கிய முடிவு!
Russia's Crude Oil Discount | ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்க தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை. இதன் காரணமாக ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் சில சலுகைகளை அறிவித்துள்ளது.

மாஸ்கோ, செப்டம்பர் 04 : ரஷ்யாவில் (Russia) இருந்து கச்சா எண்ணெய் (Crude Oil) வாங்க கூடாது என இந்தியாவை அமெரிக்கா (America) கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி வருகிறது. இருப்பினும் இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலையில் இந்தியாவுக்கு, ரஷ்யா சில தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா, இந்தியாவுக்கு தள்ளுபடியுடன் கச்சா எண்ணெய் வழங்கி வரும் நிலையில், தற்போது சலுகைகளை அதிகரித்துள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் – அமெரிக்கா
இந்தியா தனது எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. ஆனால், இவ்வாறு இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. எனவே அதனை காரணமாக கொண்டு ஏற்கனவே இந்தியா மீது விதிகப்பட்ட 25 சதவீதம் வரியை மேலும் 25 சதவீதம் அதிகரித்து அறிவித்தது. இதன் காரணமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. 600 பேர் உயிரிழப்பு.. கண்ணீர் வடிக்கும் மக்கள்!




இந்தியாவுக்கு மேலும் சில சலுகைகளை வழங்கிய ரஷ்யா
தன்னிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா கடும் நெருக்கடிகளை எதிர்கொள்வதை கவனித்த ரஷ்யா, சலுகைகளுடன் இந்தியாவுக்கு கச்சா என்ணெய் வழங்கி வருகிறது. அதாவது ஜூலை மாதம் முதல் பீப்பாய்க்கு ஒரு அமெரிக்க டாலரும், கடந்த வாரம் 2.50 அமெரிக்க டாலரும் கச்சா எண்ணெய்க்கு தள்ளுபடி அளித்தது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா மேலும் தள்ளுபடியை வழங்கியுள்ளது. அதாவது, ரஷ்ய எண்ணெயின் விலையில் இந்தியாவுக்கு ஒரு பீப்பாய்க்கு 3 முதல் 4 அமெரிக்க டாலர்கள் வரை குறைத்துள்ளது.
இதையும் படிங்க : ‘தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு’ பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் சாடிய பிரதமர் மோடி!
இதன் காரணமாக செப்டம்பர் பிற்பகுதியிலும், அக்டோபர் மாதத்திலும் எற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை குறைந்த விலையில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்ச எண்ணெய் வழங்கி வரும் ரஷ்யா, தன்னால் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சந்திக்கும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.