Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு’ பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் சாடிய பிரதமர் மோடி!

PM Modi Speech In SCO Summit : சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பயங்கரவாதம் குறித்து முக்கிய கருத்தை அவர் பகிர்ந்துள்ளார். அந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் இருக்கும் நிலையில், பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டோம் என கூறியுள்ளார்.

‘தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு’ பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் சாடிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Sep 2025 10:45 AM

டெல்லி, செப்டம்பர் 01 :  அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி, (PM Modi) 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி சீனா (PM Modi China Visit) சென்றார். சீனா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டதோடு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து தற்போது, ஹாங்காய்  ஒத்துழைப்பு மாநாட்டில் (SCO Summit 2025) பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான், ரஷ்யா,  ஈரான் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.  பாகிஸ்தான்  பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்  இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிலையில்,  பயங்கரவாதம் குறித்து கடுமையாக பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், “ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களுக்கு ஒரு பிரமாண்டமான வரவேற்பு அளித்ததற்காக ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காலத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப ஹாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வளர்ச்சியடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்று, இந்தியா சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தைப் பின்பற்றி முன்னேறி வருகிறது.. ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்ற நாங்கள் முயற்சித்துள்ளோம்.

Also Read : ’280 கோடி மக்களின் நலன்.. வரலாற்று பொறுப்பு’ – பரஸ்பர அன்பை பரிமாறிய பிரதமர் மோடி – ஜின்பிங்!

பயங்கரவாதத்தை சகித்து கொள்ள முடியாது


இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உங்கள் அனைவரையும் ஒரு பகுதியாக இருக்க அழைக்கிறேன். வலுவான இணைப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கான கதவுகளையும் இந்தியா எப்போது திறக்கும்எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை அடிப்படையாகும். ஆனால் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை பெரிய சவால்களாக உள்ளன. பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.

சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன.  இதை எப்படி ஏற்று கொள்ள முடியும்? இதனை நாங்கள் ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம்பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எந்த இரட்டை நிலைப்பாடும் பொறுத்துக் கொள்ளப்படாது. சமீபத்தில் பஹல்காமில் பயங்கரவாதத்தின் அசிங்கமான முகத்தைக் கண்டோம்.

Also Read : 7 வருடங்களுக்கு பிறகு.. சீன அதிபரை சந்தித்த பிரதமர் மோடி.. முக்கியத்துவம் என்ன?

பயங்கரவாதத்தில் எந்த சமரசமும் இருக்காது. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தைக் கண்டிக்க வேண்டும். இது மனிதகுலத்திற்கு நாம் செலுத்தும் கடமை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளது. கூட்டு நடவடிக்கையின் மூலம் அல்கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராட இந்தியா முயற்சி எடுத்தது” எனக் குறிப்பிட்டார்.