Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’280 கோடி மக்களின் நலன்.. வரலாற்று பொறுப்பு’ – பரஸ்பர அன்பை பரிமாறிய பிரதமர் மோடி – ஜின்பிங்!

PM Modi Meet China President XI Jinping : 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி சீனா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின்போது, இந்தியா சீனா உறவு குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

’280 கோடி மக்களின் நலன்.. வரலாற்று பொறுப்பு’ – பரஸ்பர அன்பை பரிமாறிய பிரதமர் மோடி –  ஜின்பிங்!
பிரதமர் மோடிImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 31 Aug 2025 13:44 PM

டெல்லி, ஆகஸ்ட் 31 :  அரசு முறைப்பயணமாக 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான நேற்று பிரதமர் மோடி சீனா (PM Modi China Visit) சென்றுள்ளார். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் (SCO Summit 2025) கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை (China President XI Jinping) பிரதமர் மோடி சந்தித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்புக்கு மத்தியில், இந்தியா சீனா பிரநிதிகளின் சந்திப்பு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பு பிரதமர் மோடி அமெரிக்க வரி குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்த முக்கியமான தகவல்களை பிரதமர் மோடி வழங்கினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான இருதரப்பு சந்திப்பின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி,அன்பான வரவேற்புக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்தினோம். இது எங்கள் உறவுகளுக்கு நேர்மறையான திசையை அளித்ததுஎல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட சூழல் நிலவுகிறது. எல்லை மேலாண்மை தொடர்பாக நமது சிறப்பு பிரதிநிதிகள் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

Also Read : உக்ரைனில் அமைதி திரும்ப உறுதுணையாக இருப்போம் – அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி..

இந்தியா சீனா உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி

கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்களும் மீண்டும் தொடங்கப்படுகின்றன.  இருநாடுகளைச் சேர்ந்த 280 கோடி மக்களின் நலன் நமது இருதரப்பு  ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் உறவு மனிகுலத்தின் நலனுக்கு வழிவகுக்கும். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” எனக் கூறினார். 

Also Read : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள சீனா சென்ற பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு..

மேலும், இந்த சந்திப்பில் சீன அதிபர் ஜின்பிங் பேசுகையில், “பிரதமர் அவர்களே, உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஹாங்காய் உச்சி மாநாட்டிற்காக சீனாவிற்கு உங்களை வரவேற்கிறேன். கடந்த ஆண்டு, கசானில் ஒரு வெற்றிகரமான சந்திப்பை நடத்தினோம். உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் நாங்கள். எங்கள் இருநாட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்துதல், வளரும் நாடுகளின் ஒற்றுமை மற்றும் புத்துணர்ச்சியை ஊக்குவித்தல் வரலாற்றுப் பொறுப்பை நாங்கள் இருவரும் சுமக்கிறோம். இந்தியா சீனா நட்புறவுடன் இருப்பது சரியானது” என்று அவர் கூறினார்.