SCO Summit 2025: 7 வருடங்களுக்கு பிறகு.. சீன அதிபரை சந்தித்த பிரதமர் மோடி.. முக்கியத்துவம் என்ன?
PM Modi Meet Chinese President Xi Jinping : ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு, சீனா சென்று பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதற்கிடையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

ஜப்பான், ஆகஸ்ட் 31 : 7 வருடங்களுக்கு பிறகு சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்புக்கு மத்தியில், சீன அதிபரை பிரதமர் மோடி (PM Modi China Visit) சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது. ஜப்பான் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதியான நேற்று மாலை சீனாவுக்கு சென்றடைந்தார். ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி சீனா சென்றிருக்கிறார். சீனாவில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு இந்திய சமூகத்தினிர் தரப்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், இந்தியர்களிடம் கலந்துரையாடினார். இரண்டு நாட்கள் பிரதமர் மோடி சீனாவில் இருக்க உள்ளார். சீனாவில் இருக்கும் பிரதமர் மோடி, தியான்ஜின் நகரின் இரண்டு நாட்கள் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அமெரிக்க வரி விதிப்புக்கு நடுவில், இந்த உச்சி மாநாடு நடப்பது பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், கிர்கிஸ் அதிபர் சதீர் ஜபரோவ் மற்றும் தாஜிக் அதிபர் எமோமாலி ரஹ்மோன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.




Also Read : திருப்பி அடிக்குமா இந்தியா? பதற்றத்தில் அமெரிக்க நிறுவனங்கள்.. வரியால் நடக்கும் குழப்பங்கள்!
சீன அதிபரை சந்தித்த பிரதமர் மோடி
#WATCH | Prime Minister Narendra Modi holds a bilateral meeting with Chinese President Xi Jinping in Tianjin, China.
(Source: ANI/DD News) pic.twitter.com/BNRfDkDtCW
— ANI (@ANI) August 31, 2025
ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. தெற்காசியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு பதட்டங்கள் நீடிக்கின்றன. மேலும் டிரம்ப் உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த மாநாடு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு இடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பு பெரிதும் முக்கியத்துவம் பெருகிறது. இந்த சந்திப்பின்போது, இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்தும், வர்த்தகம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : தங்கம் உற்பத்தியில் தடுமாறும் அமெரிக்கா.. இந்த நாடுகள்தான் டாப் லிஸ்ட்!
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனையெடுத்து, 2019ல் சீன பிரதமர் ஜின்பிங் இந்தியா வந்தார். அதன்பிறகு, 2020ல் கல்வான் பகுதியில் சீனா இந்தியா இடையே நடந்த தாக்குதலுக்கு பிறகு, இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. அதற்கு பிறகு, பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.