Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SCO Summit 2025 : ஒரே ஃபிரேமில் இந்தியா – ரஷ்யா – சீனா.. பிரதமர் மோடி – புதின் சந்திப்பு.. பின்னணி என்ன?

PM Modi Meet Russia President Putin : சீனாவில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்துள்ளனர். சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டில்  இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான், சீனா,  ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட உலக தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

SCO Summit 2025 : ஒரே ஃபிரேமில் இந்தியா – ரஷ்யா – சீனா.. பிரதமர் மோடி – புதின் சந்திப்பு.. பின்னணி என்ன?
பிரதமர் மோடி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Sep 2025 10:43 AM

டெல்லி, செப்டம்பர் 01 : சீனாவில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (PM Modi Putin Meet) சந்தித்துள்ளனர். சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டில்  (SCO Summit 2025) இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான், சீனா,  ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட உலக தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க வரி விதிப்பு மதிப்பில், சீனாவில் உலக தலைவர்கள் ஒன்று கூடியது பெரிதும் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  நான்கு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி டெல்லியில் இருந்து ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பானில் முக்கிய தலைவர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு, 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி சீனா சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பின்பேரில், பிரதமர் மோடி சீனா சென்றார். சீனா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று உலக நாடுகள் எதிர்பார்த்த சீனா அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு ஒரு மணி நடந்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பில் இந்தியா சீனா உறவு குறித்து பல்வேறு விஷயங்களை இரு தலைர்வகளும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, 2025 செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  

Also Read : ’280 கோடி மக்களின் நலன்.. வரலாற்று பொறுப்பு’ – பரஸ்பர அன்பை பரிமாறிய பிரதமர் மோடி – ஜின்பிங்!

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், கிர்கிஸ் அதிபர் சதீர் ஜபரோவ் மற்றும் தாஜிக் அதிபர் எமோமாலி ரஹ்மோன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி – புதின் சந்திப்பு

அமெரிக்க வரி விதிப்பு மத்தியில் சீனாவில் உலக தலைவர்கள் ஒன்றுகூடி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில் தான்,  பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.  பிரதமர் மோடி மற்றும் புதின் இருவரும் கைகுலுக்கி, கட்டியணைத்து மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதோடு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் உடன் இருந்தார்

Also Read : 7 வருடங்களுக்கு பிறகு.. சீன அதிபரை சந்தித்த பிரதமர் மோடி.. முக்கியத்துவம் என்ன?

புகைப்படத்தை பகிர்ந்த பிரதமர் மோடி


மூன்று பேரின் சந்திப்பு குறித்து புகைப்படத்தை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.  புதினை சந்திப்பது எப்போது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.  தொடர்ந்து, காலை 10 மணிக்கு பிரதமர் மோடி-புதின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  அப்போது, சீன அதிபர் ஜின்பிங்கும் உடன் இருப்பார்.  அமெரிக்க வரி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படலாம். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டி அமெரிக்கா 25 சதவீத வரி விதித்திருக்கும் நிலையில், அது தொடர்பாக  இருவரின் சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.