AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : ஆட்டோ ஓட்டுநருக்கு தனது லம்போர்கினியை ஓட்ட கொடுத்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!

Man Gave His Lamborghini To An Auto Driver For A Ride | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், லம்போர்கினி ஓட்டுநர் ஒருவர் தனது காரை ஆட்டோ ஓட்டுநரிடம் ஓட்ட கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : ஆட்டோ ஓட்டுநருக்கு தனது லம்போர்கினியை ஓட்ட கொடுத்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Jul 2026 23:19 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், லம்போர்கினி (Lamborghini) உரிமையாளர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரின் மகிழ்ச்சிக்காக தனது லம்போர்கினி காரை அவரிடம் கொடுத்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆட்டோ ஓட்டுநர் உடன் லம்போர்கினியை ஸ்வாப் செய்த நபர்

ஆடி, லம்போர்கினி உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. ஆனால், பொருளாதார சூழல்கள் மற்றும் நெருக்கடிகள் காரணமாக பலராலும் அத்தகைய விலை உயர்ந்த கார்களை வாங்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில், சாலையில் சென்ற லம்போர்கினி காரை பார்த்து ஆசைப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அந்த காரின் உரிமையாளர் தனது காரை ஓட்டிப் பார்க்க கொடுத்த சம்பவத்தின் வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இந்திய கடைக்காரரின் நேர்மையை பாராட்டிய போலந்து பெண்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by RAKESH KUMAR (@rakesh_knv)

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒருவர் சாலையில் லம்போர்கினி காரை ஓட்டிச் செல்கிறார். அவரை கண்டதும் சாலையில் ஆட்டோ ஓட்டிச் செல்லும் நபர் அவரிடம் பேசுகிறார். அப்போது இருவரும் தங்களது வாகனங்களை மாற்றிக்கொள்கின்றனர். அதாவது லம்போர்கினி ஓட்டி வந்த நபர் ஆட்டோவையும், ஆட்டோ ஓட்டி வந்த நபர் லம்போர்கினியையும் ஓட்டுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ஐரோப்பா வெயிலில் ஆம்லெட் போட்ட நபர்.. இணையத்தை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கிய வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த லம்போர்கினி உரிமையாளரின் செயலை பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us