Viral Video : Pray for us.. லைவில் பார்வையாளர்களுக்கு கோரிக்கை வைத்த செய்தியாளர்!
Female Journalist's Risky Live Report | செய்தியாளர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து செய்தி சேகரிப்பில் ஈடுபடுவர். அந்த வகையில் பெண் செய்தியாளர் ஒருவர் மிகவும் ஆபத்தான முறையில் ஆற்றுக்கு நடுவே செய்தி சேகரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மக்களுக்கு உடனடியாக செய்தியை கொண்டுச் சென்று சேர்ப்பதில் செய்தி தொலைக்காட்சிகளின் பங்கு அளப்பறியது. காரணம், ஒரு செய்தியை விரைவாக மக்களிடம் கொண்டுச் செல்ல அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கின்றனர். மிகவும் ஆபத்தான பல இடங்களில் கூட அவர்கள் சென்று செய்தி சேகரித்து மக்களுக்கு வெளியிடுகின்றனர். அந்த வகையில், ஆபத்தான முறையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஒரு பெண் செய்தியாளரின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
லைவில் பார்வையாளர்களுக்கு கோரிக்கை வைத்த செய்தியாளர்
எங்கு எந்த ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றாலும், அந்த இடத்திற்கு சென்று அதனை உலகிற்கு தெரியப்படுத்துவது செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் பணியாக உள்ளது. உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட போர்களை கூட செய்தி எடுக்கும் பணியில் ஏராளமான செய்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு செய்தி சேகரிக்கும்போது தாக்குதல்களில் சிக்கி சிலர் உயிரிழந்த சோக சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் பெண் செய்தியாளர் ஒருவர் ஆபத்தான முறையில் செய்தி சேகரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டும் நபர்.. உணர்ச்சி பொங்கும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
https://t.co/BwmHaOHvtD#Pakistani #PakistanFloods #mehrunnisa pic.twitter.com/MreQrRTEUX
— Nikhil Pandey (@Nikhil_Pandey04) August 28, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் செய்தியாளர் ஒருவர் தண்ணீரின் நீர்மட்டம் உயர்ந்தது குறித்து நேரலை பதிவு செய்துக்கொண்டு இருக்கிறார். அவர் தனது குழுவுடன் ஒரு சிறிய படகில் அந்த நேரலையை பதிவு செய்யும் நிலையில், அந்த படகு அங்கும் இங்குமாக ஆடுகிறது. இதனால், அந்த பெண் செய்தியாளர் பதற்றம் அடைகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சன்ரூஃபை திறந்து வேடிக்கை பார்த்த சிறுவன்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!
பார்வையாளர்களுக்கு கோரிக்கை வைத்த செய்தியாளர்
படுகு ஆடிய நிலையில், அந்த பெண் எனது இதயம் கீழே இறங்குகிறது. படப்படவென துடிக்கிறது. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு மிகவும் பயமாக உள்ளது என்று அந்த பெண் கூறுகிறார்.