திடீரென கீழே விழுந்த பாகன்… துடித்துப்போன யானை – வைரலாகும் வீடியோ
Viral Video : யானை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் ஒரு வீடியோவில் பாகன் கீழே விழுந்ததும் யானை அவரை தும்பிக்கையால் தூக்கி விடு்ம் வீடியோ நெட்டிஷன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

யானை (Elephant) தொடர்பான வீடியோகள் அடிக்கடி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் யானை அதன் பாகனிடம் காட்டும் அணுகுமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் இருக்கும் இந்த வீடியோவைப் பார்த்த பிறகு நெட்டிசன்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோவில், யானையின் அன்பும், அதன் பாகனிடம் அதன் ஆழமான பற்றுதலைக் காணலாம். வீடியோவில், ஒரு யானை அதன் பாகனுடன் காடு வழியாக நடந்து செல்வதைக் காணலாம். திடீரென்று, அந்த பாகன் தரையில் விழுவது போல் நடிக்கிறார். இதைப் பார்த்த யானை உடனடியாக வருத்தமடைகிறது. இதனால், அது உடனடியாக உரிமையாளரை மேலே தூக்க முயற்சிக்கத் தொடங்குகிறது.
பாகனை காப்பாற்றும் யானை
வைரலாகும் வீடியோவில் யானை ஒன்று அதன் பாகனுடன் நடந்து போகிறது. இந்த நிலையில் பாகன் கீழே விழுகிறார். அந்த நேரத்தில் யானை தன் கனமான கால் அதன் உரிமையாளரின் உடலில் படாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்துகிறது. வீடியோவில், யானை மெதுவாக அதன் உரிமையாளரை அதன் தும்பிக்கையால் தூக்குவதைக் காணலாம். இந்தக் காட்சி மக்களின் இதயங்களை வென்று வருகிறது.
வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டது மற்றும் ஆயிரக்கணக்கானவர்களால் விரும்பப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் பல்வேறு வகையான எதிர்வினைகளை அளித்து வருகின்றனர். சிலர் பாகனை விமர்சித்து வருகின்றனர். ஒரு ரீலுக்காக இப்படியா செய்வது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதில் ஒருவர், மனிதர்களை யானை இவ்வளவு தூரம் நேசிக்க கூடாது. மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள். நல்ல விலை கொடுத்தால் யானையை விற்றுவிடுவார்கள். ஒரு ரீலுக்காக யானையின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள் என கமெண்ட் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யானை மனிதர்களுடன் இப்படி அன்பு காட்டும் அதே வேளையில் மற்றொரு பக்கம் யானை மனிதர்களை துன்புறுத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. யானைகள் கூட்டமாக வாழும் ஒரு விலங்கினம். தன் கூட்டத்தில் ஒரு யானை இறந்தால் மற்ற யானைகள் துக்கம் அனுசரிக்கும். யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம். ஒருமுறை யானைகள் பயணிக்கும் பாதையில் இருந்து மீண்டும் வேறு பாதையில் பயணிக்காது.