Viral Video : பாலியில் இளைஞரின் Sun Glass-ஐ பிடுங்கிச் சென்ற குரங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Monkey Steals Sunglasses From A Man | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இளைஞர் ஒருவரிடம் இருந்து குரங்கு சன் கிளாசை பிடுங்கிக்கொண்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாய், பூனை, யானை உள்ளிட்ட சில விலங்குகள் மனிதர்களுடன் நெருங்கி பழகும். அத்தகைய விலங்குகளில் ஒன்று தான் குரங்கு. அவ்வாறு குரங்குகள் மனிதர்களுடன் விளையாடும், சேட்டை செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் பாலியில் இளைஞர் ஒருவரிடம் சன் கிளாசை குரங்கு பிடுங்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் குரங்குகள் தங்களுக்கு நடைபெற்ற அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இளைஞரின் சன் கிளாசை பிடுங்கிச் சென்ற குரங்கு
விலங்குகளிலே அதிக சேட்டை செய்யும் உயிரினமாக குரங்கு உள்ளது. இதன் காரணமாக அதிக சேட்டை செய்யும் நபர்களை குரங்கு சேட்டை என்று அழைப்பார்கள். அந்த அளவுக்கு குரங்குகள் சேட்டை செய்யும். இந்த நிலையில், குரங்கு சேட்டையை நிரூபிக்கும் விதமாக குரங்கு ஒன்று இளைஞரின் சன் கிளாசை பிடிங்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.




இதையும் படிங்க : Viral Video : மகனின் அமெரிக்க காதலி.. மலர் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜம்மு & காஷ்மீர் குடும்பம்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு புகைப்படம் எடுக்கிறார். அப்போது அங்கு வரும் குரங்கு ஒன்று அந்த நபர் அணிந்திருக்கும் சன் கிளாசை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறது. அதனை பார்த்து அங்கிருக்கும் மற்ற சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். பிறகு அந்த குரங்கு மீண்டும் அந்த இளைஞரை நோக்கி வருகிறது. அவர் குரங்கிடம் தனது சன் கிளாசை திரும்ப தருபடி கைகளை நீட்டி கேட்கிறார். ஆனால், அந்த குரங்கு அவரிடம் சன் கிளாசை தராமல் மிகுந்த கோபத்துடன் கத்துகிறது. அதனை கண்ட அந்த நபர் அப்படியே அமைதியாகி விடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிகாவியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : கலர் பாம்கள் முதல் குதிரை ஊர்வலம் வரை.. லண்டனில் ஆசிய முறைப்படி நடைபெற்ற மாப்பிள்ளை ஊர்வலம்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் குரங்குடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.