மனைவியை கயிற்றில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த கணவன்.. பணம் தராத ஆத்திரத்தில் வெறிச்செயல்!
Husband Brutally Beats Wife for Money | ஆந்திர பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கயிற்றில் கட்டி வைத்து பெல்ட்டால் மிக கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரகாசம், செப்டம்பர் 23 : ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) கணவன், தனது மனைவியை கயிற்றில் கட்டி வைத்து பெல்டால் மிக கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் தனது மனைவியிடம் பணம் கேட்ட நிலையில், தற்போது பணம் இல்லை என்று கூறியதால் இத்தகைய கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்த முழு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
மனைவியை கயிற்றில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த கணவன்
ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருநத்தம். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து அவரது மனைவி, 4 குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். வேறு ஒரு பெண்ணுடன் தனியாக வசித்து வரும் குருநத்தம் குடும்பத்தினரை பார்க்க அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அவ்வாறு ஊருக்கு வரும் அவர் மனைவியிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.




வலியால் அலறி துடித்த பெண் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
Hello @APPOLICE100,
Catch this monster and give him the same treatment he gave his wife or worse
Gurunadham Balaji from Tarlupadu Mandal brutally beaten his wife Lakshmi, a daily wage worker & mother of four for refusing to hand over her hard earned money https://t.co/87iZtO1l8n— Voice of Hindus (@Warlock_Shubh) September 17, 2025
இந்த நிலையில், இந்த முறை ஊருக்கு வந்த அவர் தனது மனைவியை கயிற்றில் கட்டி வைத்து பெல்டால் மிக கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் அவரது மனைவி அலறி துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அவர்கள் குருநாத் அவரது மனைவியை கொடூரமாக தாக்குவதை தடுத்து நிறுத்தவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் , அவர் எதையும் கண்டுக்கொள்ளமல் தனது மனைவியை மிக கடுமையாக தாக்கியுள்ளார். அவர் தனது மனைவியிடம் பணம் கேட்ட நிலையில், மனைவி தற்போது பணம் இல்லை என்று கூறியதால் இத்தகைய கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்த நபர்.. காட்டிக் கொடுத்த செல்ஃபி!
இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்தி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.