காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்த நபர்.. காட்டிக் கொடுத்த செல்ஃபி!
Uttarpradesh Crime News: கான்பூரைச் சேர்ந்த 20 வயது அகன்ஷா, சூரஜ் குமார் உத்தம் என்பவருடன் காதலில் இருந்து வந்தார். உத்தம், அகன்ஷாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து அவரைக் கொலை செய்தார். நண்பர் ஆஷிஷ் உதவியுடன் உடலை யமுனையில் வீசியுள்ளார்.

கான்பூர், செப்டம்பர் 23: உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த ஒருவர், தனது காதலிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததால் அவரைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, “20 வயதான அகன்ஷா என்ற பெண்ணும், சூரஜ் குமார் உத்தம் என்ற நபரும் காதலித்து வந்துள்ளனர். அதேசமயம் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் குடியிருந்தும் வந்துள்ளனர். இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அகன்ஷாவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதை உத்தம் கண்டறிந்தார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்ஷாவுக்கும் சூரஜ் குமார் உத்தமுக்கும் இடையே வழக்கம்போல வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உத்தம் அகன்ஷாவை கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து அவரது தலையை சுவரில் மோதி கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது நண்பர் ஆஷிஷ் குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 71 வயதில் 2வது திருமணம் செய்ய இந்தியா வந்த பெண் கொலை.. 75 வயது நபர் தீட்டிய சதி திட்டம்!




உடனே சூரஜ் குமார் உத்தம் வீட்டிற்கு வந்த ஆஷிஷ் குமார் உடலை அப்புறப்படுத்த ஐடியா வழங்கினார். அதன்படி அவர்கள் இருவரும் அகன்ஷாவின் உடலை ஒரு பையில் அடைத்தனர். அதை யமுனை நதியில் கொண்டு போய் வீச திட்டமிட்டனர். அதன்படி சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள பண்டாவை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
இதற்கிடையில் சூரஜ் குமார் உத்தம் அகன்ஷாவின் உடலை அடைக்கப்பட்ட பேக்குடன் செல்ஃபி எடுத்துள்ளார். இந்த போட்டோ தான் வழக்கின் விசாரணையில் குற்றவாளி இருவரையும் சிக்க வைக்க காரணமாக அமைந்தது. காரணம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி அகன்க்ஷாவின் தாயார் தனது மகளை உத்தம் கடத்திச் சென்றதாகக் கூறி போலீசில் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் உடனடியாக உத்தமையும் அவரது நண்பர் ஆஷிஷ் குமாரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், உத்தம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அனுப்பிய கணவன்.. மனமுடைந்த மனைவி தற்கொலை!
எலக்ட்ரீஷியனான உத்தம், சந்தேகத்திற்குரிய விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு ஜூலை 21 ஆம் தேதி அகன்ஷாவை கொலை செய்ததாக தெரிவித்தார்.அகன்ஷா ஒரு உணவகத்தில் பணிபுரிந்த நிலையில் இந்த ஜோடி ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு காதல் உறவை வளர்த்துள்ளனர். உத்தமுடன் ஒரே வீட்டில் குடியேறுவதற்கு முன்பு, அகன்ஷா தனது சகோதரியுடன் கான்பூரின் பார்ரா பகுதியில் வசித்து வந்தார். பின்னர் இந்த ஜோடி ஹனுமந்த் விஹாரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தனர். இப்படியான நிலையில் இருவருக்குமிடையேயான வாக்குவாத உரையாடல்கள் உத்தமின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து உத்தம், ஆஷிஷ் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.