Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சபரிமலையில் பக்தர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்த 6 கோரிக்கைகள் – உலக மலையாளி கவுன்சிலின் துணைத் தலைவர் கோரிக்கை

சபரிமலையில் பக்தர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்த லோக் கேரள சபையின் சிறப்பு அழைப்பாளரும் , உலக மலையாளி கவுன்சிலின் துணைத் தலைவருமான தினேஷ் நாயர் 6 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அவரது 6 கோரிக்கைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சபரிமலையில் பக்தர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்த 6 கோரிக்கைகள் – உலக மலையாளி கவுன்சிலின் துணைத் தலைவர் கோரிக்கை
சபரிமலையில் தினேஷ் நாயர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Sep 2025 17:49 PM IST

சபரிமலை பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, குஜராத்தின் மலையாளி சமூகத்தில் ஒரு முக்கிய நபரான தினேஷ் நாயர், சபரிமலையின் மேம்பாட்டிற்கான விரிவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். லோக் கேரள சபையின் சிறப்பு அழைப்பாளரும் உலக மலையாளி கவுன்சிலின் துணைத் தலைவருமான தினேஷ் நாயர், கோவிலின்  பாரம்பரியத்தை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக சபரிமலை பயண அனுபவத்தை மேம்படுத்த 6 முக்கிய கோரிக்கைகளை தினேஷ் நாயர் முன் வைத்திருக்கிறார்.

சபரிமலை பயண அனுபவத்தை மேம்படுத்த தினேஷ் நாயர் முன்வைக்கும் 6 கோரிக்கைகள்

1. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் சபரிமலைக்கு அவசியம். கேரள அரசு போக்குவரத்து கழகம் மூலம் இந்த பேருந்து வசதிகளை முறையாக ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் போக்குவரத்து சேவைகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் அடிவாரத்தில் இருந்து கோவிலை அடைய ரோப் வே ஏற்படுத்த வேண்டும்.

2. பயண வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த தங்குமிடங்கள்,  அவற்றில் சுத்தமான கழிப்பறைகள், குளியலறைகள், குடிநீர் வழங்க வேண்டும்.  மேலும் தரிசன முன்பதிவுக்கான டிஜிட்டல் டோக்கன் அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.  குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட வேண்டும்.

3.  மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்ய வேண்டும். சபரிமலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும். மேலும், அவசரகால பேரிடர் மேலாண்மை பிரிவு, இரத்த தானம் மற்றும் முதலுதவி சிகிச்சை மையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

4.  சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை கவனிக்கப்பட வேண்டும். குறிப்பாக  திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் தடை ஆகியவற்றை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.  பசுமை ஆற்றல் முயற்சியின் ஒரு பகுதியாக  காடு வளர்ப்பு மற்றும் ஆற்றங்கரை பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கொள்ளப்பட வேண்டும்.

5. கலாச்சார மற்றும் ஆன்மீக தொடர்பு ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். சபரிமலை பயண தகவல் மையம் அமைக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் சர்வதேச சபரிமலை ஆராய்ச்சி மற்றும் கலாச்சார மாநாடு நடத்தப்பட வேண்டும். உலக அளவில் பக்தர்களுக்கான டிஜிட்டல் தளங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

6. -உலகளாவிய சபரிமலை கோவில் குறித்த ஃபெல்லோஷிப், உள்நாட்டு மலையாளிகள் அமைப்புகளின் பங்கேற்பு, கோவிலில் வெளிப்படைத் தன்மை, மற்றும் நிதி பயன்பாடு மற்றும் மேம்பாட்டுத்திட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம், நாயர் சபரிமலையின் பாரம்பரியத்தில் சமரசம் செய்யாமல் அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அவரது முயற்சிகள் பக்தர்களுக்கான பயண அனுபவத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு சபரிமலையில் மிகவும் நிலையான மற்றும் பக்தர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு கேரள அரசாங்கத்தையும் தேவசம்போர்டையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.