அதிர்ந்த பெங்களூர் பஸ் ஸ்டாண்ட்… மகள் கண்முன்னே பெண் துடிதுடித்து பலி… கணவர் செய்த கொடூரம்!
Bengaluru Murder : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை, அவரது கணவர் 11 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகளை உறைய வைத்துள்ளது. இது தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு, செப்டம்பர் 23 : கர்நாடகா மாநிலம் பெங்களூரு பேருந்து நிலையம் அருகே பெண் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. இதனால், அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் ஹாசன் பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (32). ரேகா தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். ரோக கால் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து, தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில், ரேகா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த லோஹிதாஷ்வா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கு ஒரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம் ரகசியாக நடந்தது. இவர்கள் இருவரும் கர்நாடகாவின் சிரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ரேகா பெங்களூருவில் கால் சென்ட்ரில் பணியாற்றி வந்துள்ளார். லோஹிதாஷ்வாவுக்கு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை வாங்கி தர ரேகா பரிந்துரைத்துள்ளார். இதன்படி, லோஹிதாஷ்வாவும் அங்கு வேலைக்கு சேர்ந்தார். திருமணம் நடந்ததில் இருந்தே ரேகா மற்றும் லோஹிதாஷ்வாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. ரேகா திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு, அவரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
Also Read : காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்த நபர்.. காட்டிக் கொடுத்த செல்ஃபி!




மகள் கண்முன்னே பெண் துடிதுடித்து பலி
இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 23ஆம் தேதியான இன்று பெங்களூர் பேருந்து நிலையம் அருகே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரேகாவின் மகளும் உடன் இருந்தார். வாக்குவாதம் நீடித்த நிலையில், பொது இடத்தில் மனைவி என்று பாராமல் கண்மூடித்தனமாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேகாவை பலமுறை குத்தினார்.
Also Read : ‘என் மனைவியை கொன்றுவிட்டேன்’ பேஸ்புக் லைவில் அறிவித்த கணவன்.. அதிர்ந்த கேரளா!
சுமார் 11 முறை ரேகாவின் வயிறு, முதுகு, மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இது அங்கிருந்த பயணிகளை உறைய வைத்தது. அதன்பின், லோஹித்ஷவா தப்பித்து சென்றுள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ரேகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காமாக்ஷிபாளைய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொலை செய்த நபரையும் போலீசார் கைது செய்தனர்.