Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தாய் கண்முன்னே கொடூரம்.. 5 வயது சிறுவன் தலை துண்டித்து கொலை.. பகீர் பின்னணி!

Madhya Pradesh Crime News : மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுவன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவனை கொலை செய்தவர் மகேஷ் என்பது அவர் சில ஆண்டுகளாக மனநல பாதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

தாய் கண்முன்னே கொடூரம்.. 5 வயது சிறுவன் தலை துண்டித்து கொலை.. பகீர் பின்னணி!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Sep 2025 13:29 PM IST

மத்திய பிரதேசம், செப்டம்பர் 27 : மத்திய பிரதேசத்தில் 5 வயது சிறுவன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவனை கொலை செய்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் கூறுகின்றனர். அவர் தாய் கண்முன்னே 5 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்துள்ளார். போலீசாரி கூற்றுப்படி, குற்றச்சாட்டப்பட்டவர் மகேஷ் (25). கலு சிங் என்பவர் வீட்டிற்குள் நுழைந்தார். குடும்பத்தினர் இதற்கு முன்பு அவரை குடும்பத்தினர் பார்த்தில்லை. வீட்டிற்குள் திடீரென நுழைந்த மகேஷ், வீட்டில் கிடந்த ஒரு கூர்மையான மண்வெட்டியை எடுத்து அங்கிருந்த சிறுவனை தாக்க முயன்றார். அப்போது, சிறுவன் தாய் அதை தடுக்க முயன்றபோது, மண்வெட்டியால் அவரை தாக்கினார்.

இதனை அடுத்து, மகேஷ், 5 வயது சிறுவன் என்று பாராமல் மண்வெட்டியால் தலையை துண்டித்து கொலை செய்தார்.  தாயின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். உடனே மகேஷை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்தனர். இதனை அடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மகேஷை கைது செய்தனர்.

Also Read : மனையிவின் நடத்தையில் சந்தேகம்.. 2 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை.. ஷாக் சம்பவம்!

5 வயது சிறுவன் தலை துண்டிக்கப்பட்டு கொலை

மேலும், ரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்ட கிடந்த சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கொலையாளி மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மகேஷ் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோபத் பாக்டியில் வசிப்பவர் என்பது தெரியவந்தது. அவர் மனநல பாதிக்கப்பட்டவர் என்றும் கடந்த மூன்று முதல் நான்கு நாட்காக வீட்டை விட்டு காணாமல் போனதாகவும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

கொடூரமான கொலைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அவர் அருகிலுள்ள ஒரு கடையில் இருந்து பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, முன்பின் அறியாத வீட்டிற்கு வந்த மகேஷ், அங்கிருந்த 5 சிறுவனை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Also Read : இளைஞர் வயிற்றில் 29 கரண்டிகள், 19 பிரஷ்கள்.. மருத்துவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பகீர் சம்பவம்!

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, சிறுவர்கள், பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கொலை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.