Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இளைஞர் வயிற்றில் 29 கரண்டிகள், 19 பிரஷ்கள்.. மருத்துவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பகீர் சம்பவம்!

Spoons and Brushes Found Inside in UP Youth Stomach | உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 29 கரண்டிகள், 19 பிரஷ்கள் மற்றும் இரண்டு பேனாக்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.

இளைஞர் வயிற்றில் 29 கரண்டிகள், 19 பிரஷ்கள்.. மருத்துவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Sep 2025 08:33 AM IST

லக்னோ, செப்டம்பர் 26 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரது வயிற்றில் இருந்து பேனா, கரண்டி, பிரஷ் உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர். மிக கடுமையான வயிற்று வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உடனடியாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளைஞரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட கரண்டிகள் , பிரஷ்கள்

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் என்ற இளைஞர். போதைப்பொருளுக்கு அடிமையான இவர் அங்குள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மிக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலியால் துடித்த அவரை மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரது வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதையும் படிங்க : நீட் தேர்வில் 99% மார்க்.. கல்லூரியில் சேரும்போது இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பம்!

அறுவை சிகிச்சை மூலம் பொருட்களை வெளியே எடுத்த மருத்துவர்கள்

அந்த இளைஞரின் வயிற்றை மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்தபோது அதில் 2 பேனா, 17 பிரஷ்கள் மற்றும் 29 கரண்டிகள் இருந்ததை கண்டு கடும்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நிலவரத்தின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள் அந்த இளைஞரை உடனடியாக  அனுமதித்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரது வயிற்றில் இருந்த கரண்டு, பிரஷ் ஆகிய பொருட்களை வெளியே எடுத்துள்ளனர். இந்த நிலையில், இளைஞரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க : லடாக்கில் வெடித்த வன்முறை.. பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு.. என்ன நடக்கிறது?

உணவு போதவில்லை என்பதால் இந்த செயலி செய்ததாக கூறிய இளைஞர்

இந்த விவகாரம் தொடர்பாக அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியபோது மறுவாழ்வு மையத்தில் வழங்கிய உணவு போதவில்லை எனதற்காக இவ்வாறு பிரஷ், கரண்டு ஆகியவற்றை உட்கொண்டதாக அவர் கூறியுள்ளார். ஒரு நாள் முழுவதும் தங்களுக்கு ஒருசில சப்பாத்திகளும், காய்கறிகளும் மட்டுமே வழங்கப்படும் என்றும் ஒருசில நாட்கள் ஒரே ஒரு பிஸ்கட் மட்டுமே சாப்பிட கிடைக்கும் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.