Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இரண்டு திருமணம் ஓவர்.. மூன்றாவதாக தொடர்பு.. மகளை கொன்ற தந்தை!

Theni Crime News: மகளுக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருந்த காரணத்தால் தந்தை கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அரங்கேறியுள்ளது. உணவில் விஷ மாத்திரை கலந்து கொடுத்தும் மகள் இறக்காததால் தந்தை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இரண்டு திருமணம் ஓவர்.. மூன்றாவதாக தொடர்பு.. மகளை கொன்ற தந்தை!
தங்கையா - பிரவீனா
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Sep 2025 07:42 AM IST

தேனி, செப்டம்பர் 26: தேனி மாவட்டத்தில் இரண்டு திருமணங்கள் செய்த பிறகும் மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்த மகளை தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் அந்த நபருடன் செல்ல முடிவெடுத்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பங்காருசாமி கண்மாய் கரையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு இளம் பெண் இறந்து கிடப்பதாக  போடி நகர் விஏஓ விஜயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.  உடனடியாக இது குறித்து அவர் போடிநாயக்கனூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் உயிரிழந்த பெண் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்த தங்கையா என்பவரின் மகள் 29 வயதான பிரவீனா என தெரிய வந்தது. இதனையடுத்து நேராக தங்கையா வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தனது மகள் பிரவீனாவை கொலை செய்ததை தங்கையா ஒப்புக்கொண்டார்.

Also Read: வரதட்சணை கொடுமை புகார்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போடிநாயக்கனூர் தாலுகா போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பிரவீனாவை கொலை செய்ததற்கான காரணம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பிரவீனாவுக்கும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், தனது கணவரை பிரவீனா பிரிந்துள்ளார். இதன் பின்னர் போடிநாயக்கனூர் அருகே இருக்கும் முந்தல் காலனி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மாசுக்காளையை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது ஒருவருடன் பிரவீனாவுக்கு ரகசிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் அடிக்கடி தனிமையில் நேரம் செலவிட்டு வந்துள்ளார். இப்படியான நிலையில் பிரவீனா ஒரேடியாக இரண்டாவது கணவரை விட்டு தற்போது தொடர்பில் இருக்கும் நபருடன் செல்ல தயாராக இருந்துள்ளார்.

Also Read: பாதை தகராறு.. அண்ணியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கொழுந்தன்!

இந்த தகவல் தங்கையாவுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக மாசுக்காளைக்கும் , பிரவீனாக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்ட நிலையில் பிரவீனாவின் நடத்தையால் தங்கையாவின் மகன் திருமணமும் தடைபட்டுள்ளது. இதனிடையே கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஆத்திரமடைந்த தங்கையா முந்தல் காலனிக்கு சென்று அங்கிருந்த பிரவீனாவை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு போடியின் பல இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் உணவில் விஷ மாத்திரை கலந்து கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். ஆனால் அது பலனஅளிக்காத நிலையில் பங்காருசாமி கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெறித்தும், அடித்தும் கொன்றதாக போலீசார் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.