Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வரதட்சணை கொடுமை புகார்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Ranipet Crime News: ராணிப்பேட்டை அருகே, வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் நிவேதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வினோத் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமையால் அவதிப்பட்ட நிவேதா, கடந்த ஆண்டு பெரியப்பா வீட்டிற்கு சென்று பின்னர் திரும்பி வந்துள்ளார்.

வரதட்சணை கொடுமை புகார்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
நிவேதா - வினோத்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 25 Sep 2025 09:02 AM IST

அரக்கோணம், செப்டம்பர் 25: ராணிப்பேட்டை அருகே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள தண்டலம் பாலாஜி நகர் பகுதியில் சேர்ந்தவர் வினோத். ஐடி கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வரும் இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே துறையில் பணிபுரியும் நிவேதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் போது பெண் வீட்டார் 27 சவரன் நகை மற்றும் சீர்வரிசை வரதட்சணையாக கொடுத்துள்ளனர் இப்படியான நிலையில் வினோத் மற்றும் நிவேதா தம்பதியினருக்கு மூன்று வயதில்  ரியா என்ற பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் தண்டலம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நிவேதாவுக்கு பெற்றோர் உயிருடன் இல்லாத நிலையில் அண்ணன் மட்டுமே உள்ளார். எனவே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு கடந்த ஆண்டு சென்றுள்ளார்.

இதையும் படிங்க:  கணவர் மரணம்.. துக்கம் தாங்காமல் மனைவி, குழந்தையுடன் தற்கொலை

பின்னர் வினோத் வீட்டு தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நிவேதா மீண்டும் தண்டலம் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வந்தும் இருவருக்குமிடையே மிகப்பெரிய அளவில் பிரச்னை வெடித்துள்ளது.

நிவேதா எதற்கெடுத்தாலும் பிடிவாதமாக இருக்கிறார், அதிகமாக செலவு செய்கிறார் என தனது பெற்றோரிடம் வினோத் கூறிவந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வினோத் வேலை செய்து வரும் நிலையில் குழந்தை ரியாவிற்கு உடல் நலக் குறைவில் ஏற்பட்டதால் வினோத்தின் பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

வீட்டில் மற்றொரு அறையில் நிவேதா தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் குழந்தையை மருத்துவரிடம் காட்டி விட்டு வீட்டிற்கு வினோத்தின் பெற்றோர்கள் வந்தனர்.  நிவேதா  தனது அறையை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்துள்ளார். பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகத்தின் பெயரில் வினோத் குடும்பத்தினர் ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தூக்கு மாட்டி நிவேதா உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையும் படிங்க: நாய் என திட்டியதால் தற்கொலை செய்துக்கொண்ட பெண் ஊழியர்.. 

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வரதட்சணை கேட்டு நிவேதாவை கொடுமைப்படுத்தியதால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த இறப்பு குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதன் பிறகு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பெயரில் நிவேதாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)