AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராணிப்பேட்டை : சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை, மற்றொரு சிறுமி படுகாயம் – பரபரப்பு சம்பவம்

Shocking Crime Near Sholingur : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே சிறுமி வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தடுக்க முயன்ற மற்றொரு சிறுமியும் தாக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளில் ஒருவரை மக்கள் மடக்கி பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை : சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை, மற்றொரு சிறுமி படுகாயம்  – பரபரப்பு சம்பவம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 May 2025 21:51 PM IST

ராணிப்பேட்டை (Ranipet) மாவட்டம் சோளிங்கர் (Sholinghur)அருகே புலிவலம் என்ற கிராமத்தில் வீடு புகுந்து 15 வயது சிறுமி வீடு புகுந்து கொலை செய்யப்பட்டுள்ளார். தடுக்க முயன்ற மற்றொரு மாணவியையும் தாக்கிவிட்டு கொலையாளிகள் தப்பிச் செல்ல முயற்சித்தனர். படுகாயமடைந்த மற்றொரு மாணவி சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடு புகுந்து மாணவிகளை தாக்கிய இரண்டு பேரில் ஒருவரை மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பள்ளி மாணவி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கிராம மக்கள் காவல்துறையினரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பள்ளி மாணவி கொலை

கொலை செய்யப்பட்ட 15 வயதான மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருவதாக கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் பிடிபட்ட கொலையாளியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று மாணவிகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பெண்கள் மீதான குற்றச்சசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் தண்டனை வழங்கினால் மட்டுமே இந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டப்படும் என்பது அனைவரும் எண்ணமாக இருக்கிறது. சோளிங்கர் பகுதியில் நடைபெற்ற மாணவியின் கொலைக்கு காரணம் தெரியவில்லை. இருப்பினும் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை நீடித்து வருவது பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

பெண் மீது வீடு புகுந்து தாக்குதல்

இதே போல கடந்த மே 12, 2025 அன்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் ஆஷா என்ற பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆஷா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சீலா என்பவரிடம் 20,000 ரூபாயை வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.  இந்த நிலையில் 4 வருடம் ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. அசலும் வட்டியும் சேர்த்து ரூ.2 லட்ச ரூபாய் தர வேண்டும் என ஆஷாவிடம் ஷீலா கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சீலா, ஆஷாவை அவரது வீடு புகுந்து தாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Follow Us