ஐயோ.. கொதிக்கும் பாலில் தவறி விழுந்த குழந்தை.. பறிபோன பிஞ்சு உயிர்!
Toddler Dies After Falls Into Boiling Milk : ஆந்திர மாநிலத்தில் கொதிக்கும் பாலில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பால் பாத்திரத்திற்கு அருகே சென்ற குழந்தை, கால் தடுமாறி பால் பாத்திரத்தில் விழுந்துள்ளார். அதிக காயங்கள் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

ஆந்திரா, செப்டம்பர் 26 : ஆந்திராவில் கொதிக்கும் பாலில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பன சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. குழந்தைகளை குறிப்பிட்ட வயது வரை நமது கண்காணிப்பில் வைக்க வேண்டும். நாம் சற்று திரும்பும் நேரத்தில் குழந்தைள் செய்யும் சில காரியங்களால் மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் ஆந்திராவில் நடந்துள்ளது. அதாவது, கொதிக்கும பாலில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் புக்கராயசமுத்திரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் குருகுல பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பாதுகாவலாக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் சம்பவ நாளில் தனது ஒன்றரை வயது குழந்தையை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, அந்த குழந்தை பள்ளியில் உள்ள சமையலறைக்கு சென்றுள்ளது. அப்போது, அங்கு கீழே கொதிக்க கொதிக்க பால் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, அங்கு சென்ற ஒன்றரை வயது குழந்தை பால் பாத்திரத்திற்கு அருகே சென்றபோது, கால் இடறி கொதிக்கும் பாலில் விழுந்துள்ளது. இதில் குழந்தையின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தாயார் உடனடியாக பால் பாத்திரத்தில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
Also Read : இளைஞர் வயிற்றில் 29 கரண்டிகள், 19 பிரஷ்கள்.. மருத்துவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பகீர் சம்பவம்!




கொதிக்கும் பாலில் தவறி விழுந்து குழந்தை பலி
அங்கு குழந்தைக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு, கர்னூர் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. அந்த வீடியோவில், சமையலறையில் இருந்து தாய் கிருஷ்ணவேணி வெளியே சென்றிருக்கிறார். அப்போது, குழந்தை தனது தாயார் இல்லாமல் அறைக்குள் நுழைந்துள்ளது.
Also Read : மனையிவின் நடத்தையில் சந்தேகம்.. 2 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை.. ஷாக் சம்பவம்!
அப்போது, அங்கு பால் பாத்திரத்திற்கு அருகே குழந்தை நெருகியபோது, கால் தடுமாறிக் கொதிக்கும் பால் இருந்த பாத்திரத்தில் விழுந்தது. வலியில் அலறிய குழந்தை கிருஷ்ணவேனி மீட்டுள்ளது போன்ற பதிவாகி உள்ளது. உயிரிழந்த குழந்தையின் பெயர் அக்ஷிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. கொதிக்கும் பாலில் குழநதை தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.