AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் மாணவர்களின் தலையில் விழுந்த பேரிடி.. குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் உயர்வு.. முழு விவரம் உள்ளே!

NEET Qualifying Marks Increase : நாடு முழுவதும் நடைபெறும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி தேர்வின் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பன குறித்த விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நீட் மாணவர்களின் தலையில் விழுந்த பேரிடி.. குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் உயர்வு.. முழு விவரம் உள்ளே!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Jul 2026 17:46 PM IST

இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு தகுதி தேர்வான நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவ, மாணவிகள் இடையே ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி நிலவுகிறது. அதன்படி, நிகழாண்டு சுமார் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். இதில், அதிக அளவு மார்க் பெரும் மாணவர்களுக்கே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், கடந்த ஆண்டு வரை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் எஸ். சி., மற்றும் ஓ. பி. சி. பிரிவினருக்கு 113 மதிப்பெண்கள் இருந்தது.

நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் உயர்வு

இந்த மதிப்பெண்கள் தற்போது வெளியாகி உள்ள நீட் மறு தேர்வில் 1170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, ஓ. சி. பிரிவை சேர்ந்த மாணவர்களின் தகுதி மதிப்பெண் 114- ஆக இருந்த நிலையில், தற்போது இது 213- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெரும் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டும் இன்றி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத மாணவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது நிகர் நிலை பல்கலைக்கழகங்களிலோ சேர்வது வழக்கமாகும்.

மேலும் படிக்க: மாணவர்களின் புத்தகப்பை சுமை இனி குறைக்கப்படும்.. இந்த நொடி முதல் கல்வி முறை மாறுகிறது – அமைச்சர் ராஜ் மோகன்..

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மிஸ்

அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை இழந்த மாணவர்கள் சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மருத்துவ படிப்பில் சேர்வது வழக்கமாகும். ஆனால், தற்போது நீட் தகுதி தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் உயர்த்தப்பட்டதன் காரணமாக வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த தேர்வுக்கான தகுதி மதிப்பெண்ணையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

மாணவர்களின் மருத்துவ கனவு சிதைவு

மருத்துவ கனவில் உள்ள மாணவர்கள் குறைந்த செலவில் வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வந்த நிலையில், தற்போது தகுதிக்கான மதிப்பெண் உயர்த்தப்பட்டதன் காரணமாக அவர்களை மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து ஓராண்டுக்கு 5 ஆயிரம் மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்கின்றனர். பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நீட் மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நஜுருல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : பெரம்பூர் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு.. முதலமைச்சர் விஜய்க்கு மீண்டும் நோட்டீஸ் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Follow Us