சூடு பிடிக்கும் பிக்பாஸ்… கேப்டனுக்கு எதிராக திரும்பும் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வார கேப்டனாக போட்டியாளர் சாதிகா தேர்வாகி இருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியான புரோமோக்களில் சாதிகாவிற்கு எதிராக போட்டியாளர்கள் பேசுவது போல வீடியோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சண்டைகளும் சலசலப்புகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே மொத்தம் 19 போட்டியாளர்களுக்கு இடையே கேப்டனுக்கான தேர்வு நடைப்பெற்றது. அதில் யார் போட்டியிட விருப்பம் தெரிவிக்கின்றனர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்படி பிக்பாஸ் வீட்டில் கேப்டனுக்கா போட்டியிட்டு சாதிகா வெற்றிப் பெற்றார். அவர் வெற்றிப் பெற்ற பிறகு வீட்டில் உள்ளவர்களை ஆளும் அணி மற்றும் எதிரணி என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படுகின்ரனர். கிட்டதட்ட சட்டமன்றம் போல இந்த வீட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அவர்கள் நடைமுறையை பார்க்கும் போதே தெரிகின்றது. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திற்கான கேப்டனாக சாதிகா தேர்வாகி உள்ளார்.
தொடர்ந்து இந்தப் போட்டியில் தினமும் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த டாஸ்கில் போட்டியாளர்களிடையே சண்டைகள் ஒருபக்கம் நடக்க பிக்பாஸ் கேப்டனுக்கும் போட்டியாளர்களுக்கும் இடையேயும் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருகின்றது. அந்த வகையில் இன்று மூன்றாவது நாளிற்கான புரோமோ வீடியோக்களை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டு வருகின்றது.




பிக்பாஸில் கேப்டனுக்கு எதிராக திரும்பும் போட்டியாளர்கள்:
அந்த வகையில் இன்றைய நாளில் முதல் புரோமோ வெளியான போது அதில் வீட்டில் உள்ள போட்டியாளர் முனியம்மா மற்றும் கேப்டன் சாதிகாவிற்கு இடையே வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் கேப்டன் சாதிகா மூன்று நபர்களை தேர்வு செய்யலாம். அந்த மூன்று நபர்களில் இருந்து ஒருவர் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேற்றப்படுவார். அப்படி அவர் மூன்று நபர்களை தேர்வு செய்து பேசும் போது மற்ற போட்டியாளர்கள் இடையே சண்டை வெடித்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… விடுதலை படத்தை விட மண்டாட்டி படமே அதிக சவாலானது – நடிகர் சூரி
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day3 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/Pmztzq0l4q
— Vijay Television (@vijaytelevision) September 9, 2026