Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்த சீமான் – வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Seeman Joins Seyon Movie: இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துவரும் 26வது திரைப்படம்தான் சேயோன். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்துவரும் நிலையில், மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த விதத்தில் இதில் நாம் தமிழர் காட்சி தலைவர் செந்தமிழன் சீமான் நடிகராக இணைத்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தம் 25 படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் 26வது திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் சேயோன் (Seyon). இதை தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனமானது தயாரித்துவருகிறது. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துள்ளார். இவர் தனது கதாபாத்திரத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுவருகிறது.
அந்த விதத்தில் இந்த சேயோன் திரைப்படத்தில் முக்கிய நடிகராக நாம் தமிழர் கட்சி தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் (Senthamizhan Seeman) நடிக்கிறாரார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை சேயோன் படக்குழு பகிர்ந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: 25 நாளில் விஸ்வநாத் & சன்ஸ் படம் வசூலித்தது எத்தனை கோடிகள் தெரியுமா? அப்டேட் இதோ
சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் சீமான் இணைந்தது குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு:
சேயோனில் இணைகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள்@Seeman4TN#சேயோன் #Seyon #VetrivelVeeravel #Varendi#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @anbariv #BhagyashriBorse @RajbShettyOMK @RKFI @turmericmediaTM… pic.twitter.com/LPb7BVQR2y
— Raaj Kamal Films International (@RKFI) September 8, 2026
தமிழகத்தில் ஆரம்பத்தில் இயக்குநர் மற்றும் நடிகராக இருந்துவந்தவர் சீமான். தான் சினிமாவில் இருக்கும்போதே மக்கள் சேவை மற்றும் சமூக சேவை, தமிழ் பற்று போன்றவற்றினால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சினிமாவில் பணியாற்றிய சமயத்திலும் அரசியல் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நாம் தமிழர் கட்சியை தொடங்கி கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்துவருகிறார். இந்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்த இவர், அவ்வப்போது படங்களிலும் பணியாற்றியிருந்தார்.
இதையும் படிங்க: நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம் – மமிதா பைஜூ குறித்து மகிழ்ச்சியடைந்த அனஸ்வரா ராஜன்
இவர் இறுதியாக இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில், பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்திருந்தார். மேலும் சாந்தனு பாக்யராஜ் நடித்துவரும் ஒரு கைதியின் டைரி போன்ற படங்களிலும் ஒப்பந்தமானார். இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் படத்திலும் நடிகராக இணைந்துள்ளார். இந்த படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் சிறப்பு நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.