நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம் – மமிதா பைஜூ குறித்து மகிழ்ச்சியடைந்த அனஸ்வரா ராஜன்
Anaswara Rajan Recent Interview | மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை அனஸ்வரா ராஜன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகை மமிதா பைஜூ குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு 28-ம் தேதி செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் உதாரணம் சுஜாதா. இந்தப் படம் நாயகியை மையப்படுத்தி வெளியானது. மேலும் இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து இருந்தார். அவரது மகளாக நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார் நடிகை அனஸ்வரா ராஜன். இவர் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள சினிமாவில் பிசியாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான எவிடே, தண்ணீர் மதன் தினங்கள், மை சாண்டா, சூப்பர் சரண்யா, அவியல், பத்மினி, நேரு, குருவாயூர் அம்பல நடையில் என தொடர்ந்து படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது.
தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை அனஸ்வரா ராஜன் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ராங்கி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இதில் நடிகை த்ரிஷா கதையின் நாயகியாக நடித்து இருந்த நிலையில் அவரின் அண்ணன் மகளாக நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை அனஸ்வரா தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.




மமிதா பைஜூ குறித்து மகிழ்ச்சியடைந்த அனஸ்வரா ராஜன்:
இந்த நிலையில் நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியீட்டிற்காக வரிசையாக காத்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை அனஸ்வரா ராஜனிடம் மலையாள சினிமாவில் அவருக்கு தோழியாக பலப் படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மமிதா பைஜூவின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அனஸ்வரா ராஜன், அவளுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவளுக்குச் சிறந்த குழுக்களும் அற்புதமான திட்டங்களும் கிடைத்துள்ளன; நான் அவளுக்கு முழு ஆதரவை அளிக்கிறேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அவர் சொன்னதைச் செய்பவர்.. முதல்வர் விஜய் கற்றுத்தந்த பாடம் குறித்து பேசிய மாளவிகா மோகனன்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“I am so happy for her. She has got wonderful teams and wonderful projects, and I’m rooting for her. We both are rooting for each other. 😊”
— #AnswaraRajan on #MamithaBaiju becoming the next actress after #AliaBhatt and #DeepikaPadukone to have three ₹200 Crore projects.…
— Movies Singapore (@MoviesSingapore) September 8, 2026
Also Read… அஜித் குமாரின் அந்தப் படத்தில் முதல் தேர்வு தளபதி விஜய் தான் – இயக்குநர் ராஜ் கபூர்