25 நாளில் விஸ்வநாத் & சன்ஸ் படம் வசூலித்தது எத்தனை கோடிகள் தெரியுமா? அப்டேட் இதோ
Vishwanath And Sons Movie Box Office Collection | நடிகர் சூர்யாவின் நடிப்பில் 46-வதாக திரையரங்குகளில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் வசூல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த தமிழ் சினிமாவில் 46-வது படமாக உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி இருந்தார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு மொழிகளில் பிசியான இயக்குநராக உள்ள இயக்குநர் வெங்கி அட்லூரி தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி என்ற படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் சூர்யா உடன் இணைந்து கூட்டணி அறிவித்த போதே ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படம் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.




25 நாளில் விஸ்வநாத் & சன்ஸ் படம் வசூலித்தது எத்தனை கோடிகள்?
படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 25 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படக்குழு தற்போது வசூல் நிலவரம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி படம் வெளியாகி 25 நாட்களில் ரூபாய் 260 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இனையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ரவி மோகன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் கெனிஷா
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
THE ONE DID IT IN STYLE 🔥❤️🔥#VishwanathAndSons crosses a MASSIVE ₹260 CRORES+ Worldwide Gross 💥💥💥
25 days of heartfelt blockbuster and still running successfully in cinemas near you 🤩🥳#BlockbusterVAS #BlockbusterVishwanathAndSons@Suriya_offl #VenkyAtluri… pic.twitter.com/eoo8qoTS7J
— Sithara Entertainments (@SitharaEnts) September 7, 2026
Also Read… மம்முட்டியின் பர்த்டே ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டது ஓம் படக்குழு